வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவு குழந்தைகளுக்கு பிடித்த மனிதரை பற்றிய பதிவு தான் இது. குழந்தைகளுக்கு பிடித்த மனிதர் என்று சொல்லும் பொழுதே தெரிந்திருக்கும். இந்த பதிவு யாரை பற்றி இருக்கும் என்று. பண்டிதர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு தான். இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே செல்லலாம். இவரை பற்றிய சிறு குறிப்பை இப்போது தெளிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ், அங்கு சட்ட படிப்பை முடித்தார்
நேருவின் சிறப்பு பெயர்கள்:
பண்டிதர் ஜவஹர்லால் நேரு
நவீன இந்தியாவின் சிற்பி
நேரு மாமா
சுகந்திர போராட்ட வீரர்
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடி
நேரு எழுதிய புத்தகங்கள்:
உலக சரித்திரம்
என் இளமை நாட்கள்
கண்டறிந்த இந்தியா
ஜவஹர்லால் நேரு சுயசரிதை.
நேரு அறிக்கை:
இங்கிலாந்து அயலுறவுச் செயலாளர் பிரகன் ஹெட்பிரபு அனைவரும் ஏற்கும் படியான அரசியல் அமைப்பை உருவாக்க முடியுமா? என்று நேருவிடம் சவால் விட்டார்.
அச்சவாலை ஏற்ற இந்திய தேசிய காங்கரஸ் கட்சி 28.2.1928 கூட்டத்தை அழைத்தார்.
எதிர்கால இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க மோதிலார் நேரு தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை நிறுவினார்.
எட்டு பேர் கொண்ட குழு தரும் அறிக்கையே நேருவின் அறிக்கை ஆகும்.
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
இவர் ஆகஸ்ட் 15, 1947 – மே 27, 1964 வரை இந்தியாவின் முதல் பாரத பிரதமராக பணியாற்றினார்.
நேருவின் பெருமைகள்:
இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவரின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தால் 1989-ஆம் ஆண்டு நேருவை பெருமைப்படுத்தும் விதமாக தபால் தலை வெளியிடப்பட்டது.
மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு நேரு துறைமுகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
நேருவுக்கு லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
நேரு அவர்கள் குழந்தைகள் மீதும், வருங்கால இளைஞர்கள் நலன் கருதி அவர் காட்டும் அன்பின் நினைவாக இந்தியா முழுவதும் நவம்பர் 14-ஐ “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.