வீட்டில் கதவு இல்லாமல் ஒரு ஊர் இருக்கா? இங்கு வங்கிகளுக்கு கூட கதவுகள் இல்லை..!

Advertisement

கதவு இல்லாத ஊர்

நண்பர்களே வணக்கம்..! நம்முடைய ஊரில் அனைத்தும் வீடுகள் கட்ட ஆரபித்தால் என்ன செய்வார்கள். முதலில் பூமி பூஜை செய்வார்கள் அதன் பின் நிலைவாசல் வைத்து கதவு வகிக்கும் போது அது ஒரு விழாவாக அனைவரும் அழைத்து பூஜை செய்து அதன் பின் தான் மீதி வேலைகளை செய்வார்கள்.

இதை தான் இந்து மதத்தில் சாஸ்திரம் சம்பரதாயமாக செய்து வருகிறார்கள். ஆனால் இப்போது தொழிநுட்பம் முன்னேறி வருகிறது என்பதால் வீட்டில் செல்வதற்கு ஒரு கேட் அமைத்து அதனை வீட்டிலிருந்து திறக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளது.

இது அனைத்தும் திருடர்கள் பயத்தால் தான் இதேபோல் மாறி வருகிறார்கள். ஆனால் இன்று வரை ஒரு ஊரே கதவுகள் இல்லாமல் வீட்டில் வாழ்ந்து தான் வருகிறார்கள் அது தெரியுமா உங்களுக்கு வாங்க அது என்ன ஊர் என்றும் அதனை பற்றிய முழு தகவலையும் இப்போது படித்து பார்த்து தெரிந்துகொள்வோம்..!

கதவு இல்லாத ஊர்:

கதவுகள் இல்லாத ஊர் எது தெரியுமா கேட்கும் போதே ஆச்சிரியமாக உள்ளதா? இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இங்கு திருடர்கள் கூட இல்லையாம் எதுவும் திருட்டு போனதும் இல்லையாம்.

 கதவுகள் இல்லாத கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி பக்கத்தில் உள்ள கிராமம் தான் பாப்பனூர் ஆகும். இந்த ஊரில் கடந்த 3 தலைமுறையாக இந்த கிராமத்தில் உள்ள ஊர்களுக்கு கதவுகளே இல்லையாம். 

அதையும் மீறி கதவு வைத்து வீடு கட்டினால் அந்த ஊரில் உள்ள கடவுளை அவமதித்தது போல் ஆகுமாம்.

வெளியூர் போகும் போது வீட்டு வாசலில் ஒரு நூலை கட்டி அதில் ஒரு நீளமான துணியை போட்டு கீழ் பறக்காமல் இருக்க செங்கல்லை வைத்துவிட்டு செல்வார்களாம். ஆடு கோழி எதுவும் உள் செல்லாமல் இருக்குமாம். ஆனால் திருடர்கள் போலாமே என்று நினைக்கலாம் ஆனால் பாப்பானுர் கிராமத்தில் காலை, இரவு என எந்த நேரத்திலும் திருட்டு போனதில்லையாம். இதற்கு காரணம் அந்த ஊர்களின் நேர்மை மட்டுமே என்று சொல்லப்படுகிறது.

வீடுகள் மட்டுமில்லாமல் காவல் தெய்வமாக வணங்ககூடிய குலதெய்வத்திற்கு கதவுகள் இல்லையாம். தமிழ்நாட்டில் மட்டும் இப்படி ஒரு இருக்கிறதா என்று நினைத்தால் அப்படி இல்லை இதேபோல்  மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டம் நேவாசா தாலுகாவில் உள்ளது சனி ஷிங்னாபூர் கிராமத்தில் இதுபோல் கதவுகள் இல்லை. இந்த ஊரில் வங்கிகள் வீடுகள் என அனைத்திற்கும் கதவுகளே இல்லையாம்.  

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இரவு தூங்கும்போது 2 மணிக்கு முழிப்பு வருகிறதா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 
Advertisement