நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்பதன் பொருள்

nothlum thanidhalum porul in tamil

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன | Nothalum Thanithalum Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்பதன் பொருள் பற்றி படித்தறியலாம் வாங்க. இந்த வரி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற பாடலின் தொடர்ச்சியே ஆகும். அந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை அர்த்தங்களும் உள்ளன.  சரி வாங்க நாம் “நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன” பாடலின் பொருள் பற்றி அறியலாம்.

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன Meaning – Nothalum Thanithalum Meaning in Tamil:

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

Nothalum Thanithalum Meaning in Tamil:

  • இந்த பாடல் புறநானூற்றை சேர்ந்தது. இந்த பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார். இவர் சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டி சாலையில் உள்ள பூங்குன்றம் என்ற சிறு கிராமத்தை சேர்ந்தவர். இப்பாடல் நம் முன்னோர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கிறது.
  • இந்த பாடலை இயற்றி சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் 21-ம் நூற்றாண்டில் வாழும் மக்களுக்கும் இந்த பாடல் பயன்படுகிறது என்றால் நம் முன்னோர்களின் முற்போக்கான சிந்தனை பாராட்டுக்குரியது தான்.
  • பாடல் பொதுவியல் திணை மற்றும் பொருண்மொழி காஞ்சி துறையை சார்ந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் விளக்கம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா பொருள்

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்பதன் விளக்கம்:

nothalum thanidhalum meaning in tamil

  • நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்பதற்கான அர்த்தம் நமக்கு வருகின்ற துன்பம் அனைத்திற்கும் நாம் தான் காரணம். அதனை விட்டுவிட்டு மற்றவர்களை குறை சொல்வதில் அல்லது மற்றவர்களை பழிபோடுவதில் நியாயம் இல்லை. அந்த துன்பத்திற்கான ஆறுதலை மற்றவரிடம் எதிர்பார்ப்பதும் நல்லதல்ல.
  • உதாரணத்திற்கு: இரவில் சீக்கிரம் உறங்காமல் தொலைபேசியை உபயோகப்படுத்திவிட்டு காலையில் தாமதமாக எழுந்துவிட்டு நான் தாமதமாக எழுந்ததற்கு தொலைபேசி தான் காரணம் என்பதில் எவ்வித நியாயமும் இல்லை.
  • அதே போல நமக்கு நடைபெறும் நன்மைக்கும் நாம் தான் காரணம் மற்றவர்களுக்கு அதில் பங்கு இல்லை.
  • உதாரணத்திற்கு நீங்கள் படிப்பில் முதலிடம் பெற்றுள்ளீர்கள் எனில் அதற்கு உங்களுடைய அறிவு திறனும் முயற்சியும் தான் காரணம். அந்த புகழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே உரித்தானவர்கள் மற்றவர்களுக்கு எந்த வித பங்கும் இல்லை.
  • சுருக்கமாக கூறினால் நமக்கு நடக்கும் அனைத்து விஷயத்திற்கும் நாம் மட்டும் பொறுப்பு மற்றவர்கள் இல்லை.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil