ஓமிக்ரோன் வைரஸ் அறிகுறி | Omicron Virus Symptoms in Tamil
ஓமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள்: ஓமிக்ரோன் வைரஸ்🦠குறித்து உலகமே இப்போது அச்சத்தில் உள்ளது. இரண்டு வருட காலமாக இந்த கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு வந்தோம். என்றோ ஒரு நாள் இந்த பிரச்சனைக்கு எல்லாம் முடிவு வந்துவிடும் என்று நாமும் மனதை தளரவிட்டு கொண்டே இருந்தோம். நாடு முழுவதும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் கொரோனா வைரஸானது தன்னுடைய ஆட்டத்தினை மீண்டும் காட்ட தொடங்கிவிட்டது. இந்த கொரோனா தொற்று நோயால் பல லட்ச கணக்கான மனித உயிர்கள் இழப்பு என்பது வருத்தம் அடையக்கூடிய விஷயம். வாங்க புதிதாக ஆரம்பம் ஆகியுள்ள ஓமிக்ரோன் வைரஸ் குறித்து சில சுவாரஸ்யமான தகவலை உங்களுக்கு நாங்கள் பதிவிடுகிறோம்..
கொரோனா வைரஸ் விவரங்களை வழங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு |
ஓமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள்:
- அதிக உடல் சோர்வு
- தலை வலி
- வறட்டு இருமல்
- தொண்டை கரகரப்பு
- லேசான காய்ச்சல்
- இரவில் அதிகமாக வியர்வை ஏற்படுதல்
***40 வயதிற்குட்பட்ட ஆண்களே அதிக அளவில் ஓமைக்ரான் வைரஸ் (omicron virus symptoms in tamil) தொற்றால் பாதிப்படைகிறார்கள்***
ஓமிக்ரோன் வைரஸ் முதலில் எங்கு ஆரம்பம் ஆனது?
- தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பிறழ்ச்சி B.1.1.529 என்ற வேறுபாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் என்ற புதிய கிரேக்க மொழிப் பெயரை சூட்டியுள்ளது.
- இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன் முதலாக பரவத் தொடங்கியுள்ளது.
வைரஸின் தாக்கம்:
- தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வைரஸ் பரவல் மிக அதிவேகமாக மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது.
- இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளையும் இந்த வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ளது.
- இதைத் தவிர பெல்ஜியம், போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவில் தற்போது உள்ள நிலவரப்படி தொற்று பாதிப்பு அடைந்தவர்களில் பெரும்பாலானோர் 20 மற்றும் 30 வயதில் இருப்பவர்களே.
- இந்த வயது வரம்பில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் மிதமாகவே இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற வைரஸை விட ஓமிக்ரோன் வேகமாக பரவக்கூடியதா?
- மற்ற வைரஸ் நோயுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஓமிக்ரோன் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
- ஆனால் தென் ஆப்பிரிக்காவில் நிறைய பேர் பாஸிடிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளனர். இது குறித்து கூடுதல் ஆய்வுகள் நடந்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு உண்டா:
- இதுவரை உள்ள அறிவிப்பு படி, ஏற்கனவே கோவிட் 19 தொற்றினால் பாதிப்படைந்த ஒருவர் ஓமிக்ரோன் பாதிப்பால் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இருப்பினும் இது எல்லாரையும் பாதிக்காது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
- ஓமிக்ரோன் பாதிப்பு தற்போது லேசான அறிகுறிகளையே காட்டி வருகிறது. தடுப்பூசி போடுவதால் ஓமிக்ரான் தாக்குதலில் இருந்து மிகவும் எளிதாக தடுக்கலாம். தடுப்பூசி போடுவதன் மூலம், ஓமிக்ரான் வைரஸில் இருந்து எளிதாக தற்காத்துக் கொள்ளலாம்’ என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
- எந்த கொரோனா வைரஸாக இருந்தாலும் அதன் தீவிரத்தில் இருந்து தப்பிக்க கோவிட் 19 தடுப்பூசிகள் கை கொடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? |
பிசிஆர் சோதனை ஓமிக்ரான் தொற்றைகண்டறிய உதவுமா?
பிசிஆர் சோதனை ஓமிக்ரான் தொற்றை கண்டறிய பெரும் உதவியாக இருக்கிறது. இதைத் தவிர ஆன்டிஜென் கண்டறிதல் சோதனைகள் உட்பட பிற வகை சோதனைகளும் கண்டறிய உதவுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரோன் வைரஸ் தொற்று இந்திய நாட்டை பேராபத்தில் ஆழ்த்த வாய்ப்பு உள்ளதா?
- ஓமிக்ரோன் வைரஸ் தொற்று இந்தியாவிற்கு பரவ நாட்கள் எடுக்கும். இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
- இருப்பினும் இது ஆபத்தானவை என்பதால் பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாம் நடந்து கொள்வது நல்லது. இப்போது மக்கள் பீதியடைய தேவையில்லை என்று நிபுணர் கூறியுள்ளார்கள்.
தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியவை:
- இதுவரை அடிப்படையாக கோவிட் 19 வைரஸ் நோய்க்கு பின்பற்றி வந்த பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அது ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும் உதவி செய்யும்.
- மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரம் இடைவெளியில் இருக்க வேண்டும்.
- நன்கு பொருந்தக்கூடிய மாஸ்க்களை முக கவசமாக அணிய வேண்டும்.
- வீட்டை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைக்கவும்.
- நெரிசலான இடங்கள், கூட்டமான இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்க்கவும்.
- கைகளை எப்பொழுதும் கழுவி சுத்தமாக வையுங்கள்.
- இருமல் மற்றும் தும்மலை மேற்கொள்ளும் போது மற்றவர்களுக்கு பரவக்கூடிய வகையில் இல்லாமல் கைகளை மூடி பயன்படுத்துங்கள்.
- கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். அனைவரும் நலமுடன் நெடுநாள் வாழலாம்..வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |