ஆந்தை பற்றிய தகவல்கள்
வணக்கம் நண்பர்களே..! ஆந்தையை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம். ஆந்தையின் சத்தத்தை கேட்டாலே ஊரில் யாரும் இறந்து விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆந்தை தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருக்கிறது. வட இந்திய மக்கள் லக்ஷ்மியை அதிகமாக வழிபாடு செய்கின்றனர். ஆந்தையை கண்டாலே விரட்டி அடிப்பார்கள். பார்த்தாலே பயப்படுவார்கள். ஆந்தைக்கு இரவில் கண் தெரியாது. இது தகவல் அனைவரும் அறிந்தது. ஆந்தையை பற்றி யாரும் அறியாத தகவலை தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ வடுவூர் பறவைகள் சரணாலயத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா.?
பார்வை திறன்:
ஆந்தைக்கு பார்வை திறன் அதிகமாக இருக்கும். தொலைவில் இருப்பதை கூட தெளிவாக பார்க்கும் திறன் உடையது. கண்கள் பெரிதாக இருப்பதால் மற்ற கோணங்களில் பார்ப்பதற்கு அதன் தலையை 270 டிகிரி கோணம் வரை திருப்பி பார்க்குமாம்.
பகல் முழுவதும் தூங்கி இரவு முழுவதும் வேட்டையாடும். இதற்கு கண் இமைகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை கண் இமைக்க, தூங்க, கண்களை சுத்தம் செய்வதற்கு என்று மூன்றாக உள்ளது. ஆந்தையின் இறக்கை மென்மையானதாக இருக்கும்.
ஆந்தை அலறும் சத்தம்:
ஆந்தை இரவில் கத்தினால் நல்ல காரியம் நடக்கும் என்று நம்புகின்றனர். அந்த யார் வீட்டில் இருந்து கத்துகிறோதோ அந்த வீட்டில் செல்வ நிலை உயரும். கோவில் மரங்களில் ஆந்தை கத்தினால் அந்த ஊர் மக்களுக்கு நடக்கும். ஆந்தை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் கஷ்டம் வருமாம்.
வட இந்திய மக்கள்:
வட இந்திய மக்கள் அவர்களின் வீட்டில் ஆந்தை கத்தினால் நல்ல நேரமாக பார்க்கின்றனர். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில் ஆந்தை கத்தினால் லக்ஷ்மி கடவுள் சம்மதம் தெரிவிப்பதாக நம்புகின்றனர்.
வெளியில் செல்லும் போது ஆந்தையை பார்த்தால் போகும் காரியம் வெற்றியை அடையும் என்று நம்புகின்றனர். வடக்கு திசையில் ஆந்தை கத்தினால் நல்ல நேரமாகவும், மற்ற திசைகளில் கத்தினால் கெட்ட நேரமாகவும் வட இந்தியர்கள் நினைக்கின்றனர்.
ஆந்தையை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக நினைக்கின்றனர். புத்தி கூர்மையுடன் உள்ள பறவை என்று சொல்கின்றனர். இரவின் அரசன், விவசாய நண்பன், லக்ஷ்மியின் வாகனம், செல்வம் தரும் பறவை என்று மக்களுக்கு நல்லதை செய்கின்ற ஆந்தையை யாரும் வெறுப்பீர்கள்.
இந்த பதிவில் ஆந்தையை பற்றிய தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டீர்கள். அடுத்த பதிவில் சுவாரஸ்யமான தகவலுடன் சந்திக்கிறேன். இந்த பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி வணக்கம்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |