Parkinson’s Disease in Tamil..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் பயனுள்ள ஒரு தகவலை பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். அது என்னவென்றால் பார்கின்சன் நோய் பற்றிதான். நம்மில் பலரும் இந்த பார்கின்சன் என்ற வார்த்தையை மருத்துவர்கள் பயன்படுத்துவதை கேட்டிருப்போம். ஆனால் அது என்ன நோய் எப்படிப்பட்டது என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் இன்றைய பதிவில் இந்த பார்கின்சன் நோய் பற்றி விரிவாக பார்க்கலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
பார்கின்சன் நோய் பற்றிய தகவல்:
பார்கின்சன் என்றால் நடுக்குவாதம் என்பது பொருளாகும். இந்த நடுக்குவாதம் என்பது மைய நரம்பு மண்டலத்தைச் பாதிக்கின்ற நோய் ஆகும். பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத் திறன்களான பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்காது. மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது.
பொதுவாக நடுக்குவாதம் இயக்கத்தை பாதிக்கும். இந்த நோயின் மிக முக்கியமான அறிகுறி நடுக்கம் ஆகும். இந்த அறிகுறி முதலில் ஒரு கையில் ஏற்படும் எப்படியென்றால் கை ஓய்வு நிலையில் உள்ளபோது நடுக்கம் ஏற்படும். மேலும் பாதிப்படைந்த கையால் வேலை செய்யும் போது நடுக்கம் குறையும். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும்.
ஆனால் நடுக்கம் மட்டுமே நடுக்குவாத நோய்க்கான அறிகுறியல்ல. மேலும் சில அறிகுறிகளும் உண்டு. அவைகள் முறையே உடல் உறுப்புகள் இறுக்கமடைதல், முகத்தில் உணர்வுகளைக் காட்டுவதில் கஷ்டப்படுதல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.
அத்துடன் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் இயக்கங்கள் மெதுவாகுவதால், பிரதான உடல் இயக்கங்களை ஆரம்பிப்பதில் கடினமான உணர்வுகள் ஏற்படும். அதாவது நடக்கத் தொடங்கல், ஏனைய உடல் இயக்கங்களை ஒருங்கிணைத்தல் போன்றவைகூட கடினமாகும். இவற்றுடன் களைப்பு, மனச் சோர்வு, மலச்சிக்கல், எழுதுதல், சொற்களை உச்சரித்தல் போன்றவையும் கடினமாகும்.
இந்த நடுக்குவாதமானது இயக்கசீர்குலைவு என்று அழைக்கப்படும் நிலைகளின் ஒரு தொகுப்பைச் சேர்ந்த ஒன்று ஆகும். இந்த நோயின் உச்ச நிலைகளில் இது தசை விறைப்பு, தசை நார் வலிப்பு, உடலியக்கம் மந்தமாதல் மற்றும் உடலியக்கத்தை இழத்தல் ஆகிய பண்புகளைக் பாதிக்கக்கூடும்.
பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
நடுக்குவாதமுள்ள பெரும்பாலான மக்களில் நோய் மூலமறியா நடுக்குவாதம் (குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல்) இருப்பதாக விவரிக்கப்படுகிறது. மரபு சார்ந்தவை, நச்சுப்பொருள், தலை அதிர்வு, பெருமூளை சிரை போன்ற அரிதான காரணங்களால் ஏற்படுகின்றன.
ஆண்களை பாதிக்கும் ஹெர்னியா நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |