“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று வாழ்த்தும் பழமொழிக்கான அர்த்தம் தெரியுமா..?

Advertisement

பழமொழிக்கு அர்த்தம்

நாம் பேசும் சாதாரணமான தமிழ் வார்த்தைகளில் எண்ணற்ற அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் இது யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக பார்த்தீர்கள் என்றால் பழமொழிக்கு என்று தனியாக அர்த்தகங்கள் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் சிலருக்கு நாம் சொல்லும் பழமொழிக்கான உண்மையான அர்த்தகங்கள் எதுவும் தெரிவதில்லை. அப்படி ஒன்று இருக்கிறதா..? இதுநாள் வரையிலும் எனக்கு தெரியவில்லை என்று நீங்கள் புலம்ப வேண்டாம். தமிழ் பழமொழிகளில் அதிகமாக வாழ்த்துவதற்கு என்றே சொல்லக்கூடிய “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்பதற்கான அர்த்தம் என்ன என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

“வெறும் கையில் முழம் போடுவது” என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்ற பழமொழிக்கான அர்த்தம்:

 பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் பொருள்

தமிழகர் அனைவரும் ஒரு சின்ன விசேஷங்களை கூட பெரிய அளவில் நடித்தி மகிழ்வார்கள்.

அதிலும் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருமணம் மற்றும் வளையணி விழா என நிறைய விழாக்கள் மிகவும் பிரம்மாண்டமாகவும் மற்றும் பாரம்பரியத்துடனும் கொண்டாப்படுகிறது.

இந்த விழாக்கள் அனைத்திலும் நிறைய சடங்குகள் வைத்து உறவினர்களை அழைத்து ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

இப்படி நிறைய விழாக்கள் இருந்தலும் திருமணம் என்பது ஒரு பாரம்பரியமான சடங்காக இப்போதும் இருந்து வருகிறது. அப்படி திருமணம் நடந்து முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்த பெரியவர்கள் “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறுவார்கள்.

மணமக்களை வாழ்த்த கூறும் இந்த மொழிக்கான அர்த்தம் பதினாறு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா என்று கேட்டால்..?

அப்படி கிடையாது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது:

 1. கலையாத கல்வி 
 2. கபடமற்ற நட்பு 
 3. குறையாத வயது 
 4. குன்றாத வளமை 
 5. போகாத இளமை 
 6. பரவசமான பக்தி 
 7. பிணியற்ற உடல் 
 8. சலியாத மனம் 
 9. அன்பான துணை 
 10. தவறாத சந்தானம்
 11. தாழாத கீர்த்தி 
 12. மாறாத வார்த்தை 
 13. தடையற்ற கொடை
 14. தொலையாத நதி 
 15. கோணாத செயல் 
 16. துன்பமில்லா வாழ்வு

இந்த 16 வகையான செல்வங்களை பெற்று இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் ” பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்ற பழமொழிக்கான அர்த்தம் ஆகும்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement