பட்டா சிட்டா ஆன்லைன்..! Patta Chitta Online Status Tamilnadu..!

Advertisement

பட்டா சிட்டா ஆன்லைனில் பெறுவது எப்படி..! Get Patta Chitta Online Status in TN..!

Patta Chitta Online Status in Tamil: வணக்கம் நண்பர்களே..! வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பட்டா சிட்டா பெறுவது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். பட்டா சிட்டா என்ற ஆவணம் பற்றிய முழுமையான விவரம் இன்றும் பலருக்கு தெரியவில்லை. இதற்கு முந்தைய பதிவில் பட்டா சிட்டா என்றால் என்ன? அதன் தனி தனி விவரத்தினை முழுமையாக அப்டேட் செய்துள்ளோம். அதனை தொடர்ந்து நீங்களே உங்களுடைய மொபைல் அல்லது வீட்டில் கணினி பயன்படுத்தி ஆன்லைன் வழியாக பட்டா சிட்டா பெறுவது எப்படி என்பதை பற்றி ஒவ்வொரு ஸ்டெப்பாக தெரிந்துக்கொள்ளலாம்..!

newஇவற்றையும் தெரிந்துக்கொள்ளுங்கள்>>> பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன?

பட்டா சிட்டா ஆன்லைனில் பெறுவது எப்படி? 

Step 1: ஆன்லைனில் பட்டா சிட்டா பெறுவதற்கு முதலில் eservices.tn.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

Step 2: வலைதளத்திற்கு சென்றதும் “View Patta & FMB / Chitta / TSLR Extract” என்பதை கிளிக் செய்யவும். 

Step 3: அதன் பிறகு நகர்ப்புற (Urban) அல்லது கிராமப்புற (Rural) என்பதில் நீங்கள் எது என்பதை சரியாக வட்டத்திற்குள் டிக் செய்து சப்மிட் செய்யவும்.

Step 4:

Patta Chitta Online Status Tamilnadu Tamil

அதன் பிறகு இந்த பக்கமானது ஓபன் ஆகும். அதில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளிட்டு கீழே Submit என்ற பட்டனை அழுத்தவும்.

Step 5: இப்போது உங்களுடைய சொத்து விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு town Survey Land Register-ல் இருந்து உங்களுடைய சான்றிதல் சொத்து விவரத்துடன் ஆன்லைனில் வழங்கப்படும்.

Step 6: உங்களுடைய சான்றிதழில் சொத்து பகுதியின் கட்டுமான வகை, நகராட்சி கதவு எண், வசிப்பிடம், நிலத்தினுடைய வகை, சர்வே எண் போன்றவை சான்றிதழில் இருக்கும். 

newமத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2021..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

உங்களுடைய பட்டா சிட்டாவின் தற்போதைய நிலையை தெரிந்துக்கொள்ள:

Step 1: நீங்கள் அப்ளை செய்த பட்டா சிட்டாவின் ஸ்டேட்டஸை தெரிந்துக்கொள்வதற்கு edistricts.tn.gov.in என்ற லிங்கிற்கு செல்லவும்.

Step 2: Patta Chitta Online Status Tamilnadu இதில் உங்களுடைய Application ID-ஐ சரியாக கொடுத்து அதற்கு கீழ் Captcha Values என்பதில் கீழே கட்டத்தில் இருக்கக்கூடிய எண்ணினை பிழை இல்லாமல் கொடுத்து இறுதியாக Get Status என்பதை கிளிக் செய்யவும்.

பட்டா சிட்டா சரிபார்க்க:

Step 1: eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: பின் “Verify Patta” என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: 

இந்த பக்கமானது ஓபன் ஆகும். அவற்றில் உங்களுக்கென்ற Reference Number-ஐ கொடுத்து Submit கொடுக்கவும்.

ஆன்லைன் கட்டணம்:

  • ஆன்லைனில் விண்ணப்ப கட்டணமானது ரூ.100/- செலுத்த வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement