உங்களுக்கு பிடித்த நிறம் உங்கள் குணத்தை சொல்லும்!

Advertisement

Personality Colour Test in Tamil

இந்த உலகில் பொதுவாக ஒவ்வொருத்தவுங்களுக்கு ஒவ்வொரு கலர் பிடிக்கும். ஒவ்வொரு கலருமே ஒவ்வொரு விதமான குணங்களை கொண்டது. குறிப்பாக இந்த உலகில் 1 மில்லியனுக்கும் மேலான கலர்கள் உள்ளன. அவை அனைத்தும் பச்சை, வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், காவி, ஊதா, கருப்பு, நீளம், பழுப்பு, இளஞ்சிவப்பு போன்ற நிறங்களை அடிப்படையாக கொண்டு உருவானது என்று சொல்லலாம். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது அந்த வகையில் இந்த பதிவில் உங்களுக்கு பிடித்த்த நிறத்தை வைத்து உங்களது குணம் எப்படி இருக்கும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

கருப்பு:

black colour

பொதுவாக ஆண், பெண் பலருக்கு கருப்பு நிறம் என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் கருப்பு நிற உடைகளை பெரும்பாலும் அணிந்துகொள்ள கூடாது என்பார்கள். மீர் நாம் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டோம் என்றால் உடனே திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்கள் முக்கியமான விழாக்களுக்கு, இன்டர்வியூ போன்ற பெரும்பாலான விஷயங்களுக்கு கருப்பு உடைகளை தான் அணிந்து கொள்வார்களாம். இருப்பினும் நம் வீட்டில் உள்ளவர்கள் கரும் நிறம் என்றால் எதிர்ப்பு, சகுனம் சரி இருக்காது என்று பல விதமாக சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால் கருப்பு நிறம் என்பது ஆற்றல் மிக்கது என்று அர்த்தமாகும். எந்த ஒரு விஷயங்களையும் மிக எளிதாக எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.

வெள்ளை:

பொதுவாக வெள்ளை நிறம் என்பது சமாதானத்தை குறிக்கும். ஆக வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் மிகவும் அமைதியானவர்கள், நேர்மையானவர்கள் என்று சொல்லலாம். மேலும் வெள்ளை நிறத்தை விரும்புமவர்கள் மிகவும் பொறுமைசாலி என்றும் சொல்லலாம். நீங்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையை தான் விரும்புவீர்கள். உங்களுக்கு இதனால் நல்ல நண்பர்கள் இருப்பார்கள்.

சிவப்பு:

வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் புரட்சியின் நிறம் சிவப்பு என்று சொல்லலாம். சிவப்பு நிறம் பிடித்தவர்களுக்கு அதிக கோவம் அல்லது பயம் அதிகமாக இருக்குமாம். அதுவும் அவர்கள் நினைத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். அதாவது முன்வைத்த காலினை பின் வைக்க மாட்டார்களாம். சிவப்பு நிறம் பிடித்தவர்களுக்கு அதிக ஆற்றல் இருக்குமாம்.

பச்சை:

பொதுவாக பச்சை நிறத்தை விரும்புபவர்கள் செடி, கொடு, விலங்கு என்று இயற்கையை அதிகம் விரும்பக்கூடிய நபராக இருப்பார்கள். முடிந்த அளவிற்கு அனைவரிடமும் அன்பாக இருப்பார்களாம். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். யாரிடமும் தேவை இல்லாமல் பிரச்சனை செய்யமாட்டார்கள். அன்பை மட்டுமே எதிர்பார்ப்பார்கள்.

நீலம்:

blue

நீலம் என்றாலே மென்மையானவர்கள் என்று அர்த்தமாகும். நீல நிறம் பிடித்தவர்கள் பொதுவாக சமூகத்தில் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அவற்றில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். குறிப்பாக தனி துவமாக சிந்திக்க கூடிய நபராக இருப்பார்கள்.

மஞ்சள்:

மஞ்சள் நிறம் பொதுவாக மங்களகரமான நிறம் என்று சொல்லலாம். மஞ்சள் நிறம் எப்படி மிகவும் ப்ரைட்டாக இருக்கிறதோ அதேமாதிரி இந்த மஞ்சள் நிறத்தை விரும்புபவர்களும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு மஞ்சள் நிறம் பிடிக்கும் என்றால் நீங்கள் ஒரு நம்பிக்கையான, வேடிக்கையான, மகிழ்ச்சியான, ஆக்கப்பூர்வமான தனிப்பட்ட நபராக காணப்படுவீர்கள்.

இவற்றையும் கிளிக் செய்து படிக்கவும் 👉 மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement