நீங்கள் சிறந்த அம்மாவாக இருப்பதற்கு இந்த பண்புகள் இருக்க வேண்டும்..!

Advertisement

சிறந்த அம்மாவின் பண்புகள் எப்படி இருக்கும் தெரியுமா.?

ஒவ்வொரு பெண்ணும் திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டிற்க்கு சிறந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அந்த வகையில் அவர்கள் தாய்மை அடைந்தவுடன் தன் குழந்தைக்கு சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில பண்புகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் சிறந்த அம்மா தான். அது என்னென்னெ பண்புகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

ஆதரவாக இருப்பது:

உங்களின் குழந்தை எல்லா செயல்களையும் சரியாக முடிவெடுப்பதில்லை. எந்த பாதை சரியானது எது தவறானது என்று அவர்களை வழிகாட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருங்கள்.

உங்களது குழந்தை எந்த செய்தி சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் செயல்களை மதிக்க வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

தவறை உணர்வது:

உங்களின் குழந்தை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதற்கு முதலில் நீங்கள் உங்களின் தவறை ஒப்பு கொள்ள வேண்டும். உங்களின் மேல் தப்பு உள்ளது என்றால் தயங்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் இது போல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் குணத்தை உங்களிடம் இருந்து குழந்தைகள் கற்று கொள்வார்கள்.

தைரியமாக இருப்பது எப்படி.?

நீங்கள் எந்த கஷ்டத்திலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். எந்தவொரு கஷ்டத்தையும் எதிர்த்து போராட வேண்டும். வலிமையாக இருப்பது ஈஸியான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் செய்யும் செயல்களில் மிகுந்த துணிச்சலோடு செய்ய வேண்டும்.

காயம்படும்படி பேச கூடாது:

உங்களின் சுற்றி உள்ளவர்களின் மனது காயம்படும்படி பேச கூடாது. ஏதோ ஒரு சண்டை அல்லது வாக்குவாதத்தில் ஈடுபாட்டிற்கும் போது பேசும் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்.

புரிந்து கொள்ள வேண்டும்:

நீங்கள் உங்களின் குழந்தைகளின் குணங்களை புரிந்து கொள்ள வேண்டும். உங்களது குழந்தை சந்தோசமாக இருந்தால் எப்படி இருப்பார்கள். கவலையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் சிறந்த அம்மாவாக இருக்க முடியும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement