அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு..! Lucky Pet Animals For home..!

Lucky Pets For home

செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டங்கள்..! Which Pet Animal Is Lucky For home..!

Lucky Pets For home: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அதிர்க்ஷடத்தை அள்ளிக்கொடுக்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும். கண் திருஷ்டி மட்டுமின்றி செய்வினைகள், சூனியம், பேய் பிசாசுகள் போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் பெற்றது இந்த பிராணிகள். மேலும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியை பெற்றுள்ளது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள்.

சிலர் வீட்டில் வளர்த்து வரும் பிராணிகள் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆனால் திடீரென்று பிராணிகளானது இறந்து போய்விடும். இதற்கு காரணம் மிகவும் கொடூரமான வலிமையுள்ள தீய விஷயங்களை வளர்ப்பவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு பிராணிகள் ஏற்று மரணத்திற்கு செல்லும். சரி வாங்க இப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் அதிர்ஷ்டங்களை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்..!

newநாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? Dog names 2021
செல்ல பிராணிகளின் பெயர்கள்

அதிர்ஷ்டம் தரும் பறவை:

Lucky Pets For home பறவையானது ஜோதிட ரீதியாக கவனிக்கும் போது புதனின் ஆதிக்கம் அதிகம் கொண்டவர்கள் தான் வீட்டில் பறவைகளை அதிகம் வளர்ப்பார்கள். பறவை என்றாலே வாய்ப்புகளும், அதிர்ஷ்டங்களும், சுபிட்ச வாழ்க்கை முறைகளையும் அள்ளி கொடுப்பவை ஆகும். பறவையை அதிகம் நேசிப்பவர்கள் பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்க்க விரும்பமாட்டார்கள்.

பறவைகளை கூண்டில் அடைப்பதால் நம் செல்வத்தையும் அடைத்து வைப்பது என்று பொருளாகும். பறவைகள் நம் வீட்டிலே தங்குவதற்கு பறவைக்கான தனி தோட்டம், பறவை குளிப்பதற்கு இடம், கூடு கட்டி வாழ்வதற்கு இடம் தனியாக அமைத்தால் பறவையானது நம் வீட்டிலே தங்கிவிடும்.

செல்வம் பெருக நாய் வளர்ப்பு:

Lucky Pets For home நாய்கள் வீட்டில் வளர்த்தோம் என்றால் வீட்டு சூழலின் சக்திகளை அதிகரிப்பதோடு வீட்டில் உள்ளவர்களையும் சுறுசுறுப்பாகவும், உடல் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். வீட்டு நாய்கள் இல்லாமல் வேறு நாய்களை நாம் காப்பாற்றி வளர்த்து வந்தால் உங்களின் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும். வீட்டில் நாய் வளர்ப்பதற்கு தேவையான வசதிகள் எதுவும் இல்லையென்றால் நாயின் சிற்பங்களை வீட்டின் முன் வைத்தால் வீட்டிற்கு மிகவும் பாதுகாப்பு கிடைக்கும்.

சுபிட்ச வாழ்க்கை தரும் சேவல்:

Lucky Pets For home சேவலானது நீர் சுற்றியுள்ள சிறந்த சூழலில் சக்தியை உருவாக்கி விடும். பறவை இனத்தினை சேர்ந்த சேவல் சுபிட்ச வாழ்க்கையை கொடுக்கும். அரசியல் வாழ்க்கை, வேலை போன்ற செயல்களில் பாதுகாப்பை கொடுக்கும். சேவலை வளர்ப்பதால் வாழ்க்கையிலும் சரி, அன்றாடம் வேலையிலும் சரி வெற்றியை நமக்கு தேடி கொடுக்கும். வீட்டில் சேவலை வளர்க்க இடம் இல்லாதவர்கள் அலுவலகம் அல்லது வீட்டிலோ அதனுடைய படத்தை வைத்து வர பல இன்னல்கள் குறைந்துவிடும்.

ராசி அடிப்படையான மீன் வளர்ப்பு:

Lucky Pets For home மீன் என்றால் மீன ராசிக்காரர்கள் ஆவர். பொதுவாக மேஷம், மிதுனம், ரிஷபம், கன்னி, துலாம் ராசியினர்கள் மீன் வளர்ப்பது தவிர்த்துக்கொள்ளலாம். மற்ற ராசியினர் அனைவரும் மீன் வீட்டில் வளர்க்கலாம். மீன ராசியினரின் வீடு மற்ற ராசிக்காரர்களுக்கு யோகம் தரக்கூடியதாக இருக்கும். சிலருக்கு வீட்டில் மீன், லவ் பேட்ஸ் வளர்த்தால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். மீன் வளர்ப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. சிலர் மீன் பண்ணை வைத்து ராசி இல்லாததனால் அந்த தொழிலில் மிகவும் நஷ்டம் அடைந்தவர்கள் அதிகம்.

தாவரம் வளர்ப்பு:

Lucky Pets For home தாவரம் என்பது வீட்டில் அனைவரும் வளர்க்கக்கூடிய ஒன்றுதான். முள் வகைகளை சார்ந்த  ரோஜாசெடிகள் சிலருக்கு ஒத்துவராது. மேஷ ராசியினர் கனகாம்பரம், டிசம்பர் பூ போன்ற செடிகளை வளர்க்க கூடாது. மேஷ ராசிக்காரர்கள் இந்த செடியினை வளர்த்தால் வீட்டிற்கு எதிர்மறை எண்ணத்தினை கொண்டவர்கள் வருவார்கள். குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை வருபவர்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் ஏதேனும் வளர்த்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

ராசிக்காரர்கள் வளர்க்கவேண்டியவை:

Lucky Pets For homeமேஷம்: மேஷ ராசியினர் பொதுவாகவே ஆடு, கோழி சேவல், குதிரை, நாய் வளர்க்கலாம். இதனை வளர்க்க முடியாதவர்கள் மஞ்சணத்தி மரம், வேப்ப மரம் வளர்த்து வரலாம். இதனை வளர்ப்பதால் வீட்டில் சந்தோசமும், செல்வமும் அதிகரிப்பதோடு சன்னதி விருத்தி அடையும்.

ரிஷபம்: வீட்டில் பசு மாடு, காராம் பசு, முயல் போன்றவை வளர்க்கலாம். வளர்க்க இயலாதவர்கள் துளசி, கொடிக்காய், வெற்றிலை, பலாமரம் வளர்த்து வரலாம். இதனால் கடன் பிரச்சனை தீர்ந்து பொருளாதாரம் நன்கு மேம்படும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் பூனை, கிளி, நாட்டுக்கோழி வளர்க்கலாம். இந்த பிராணிகள் வளர்க்க முடியாதவர்கள் தக்காளி, வெண்டை, மருதாணி, கொய்யா, சுரைக்காய் செடிகள் வளர்த்துவரலாம். இதனால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

கடகம்: கடக ராசியினர் பிராய்லர் கோழி, வாத்து, வான்கோழி வளர்க்கலாம். வளர்க்க முடியாதவர்கள் அவரை, நெல், விளாமரம் வைத்து வரலாம். இதனை வளர்ப்பதால் குடும்பத்தில் ஆனந்தமும், செல்வாக்கும் அதிகரிக்கும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை கடக ராசியினர் நாய் வளர்க்கக்கூடாது.

சிம்மம்: சிம்ம ராசியினர் ஆடு, கோழி, தீக்கோழி, நாய், காளை மாடு வளர்க்கலாம். இந்த பிராணிகளை வளர்க்க முடியாதவர்கள் ஆல மரம், அரச மரம், பூசனை கொடி, துவரை செடி வளர்க்கலாம். இதனால் செய்யும் தொழிலில் நல்ல மேன்மை கிடைக்கும். சிம்ம ராசியினர் நாய் வளர்த்தால் பலம் கொடுக்கும். நாயினை பைரவர் என்று அழைக்கின்றனர். பைரவர் சூரியனின் ஆதிக்கம் உடையவர். சூரியன் பகை உள்ள ராசிக்காரர்கள் நாய் வளர்ப்பது நல்லதல்ல.

கன்னி: கன்னி ராசியினை சேர்ந்தவர்கள் வீட்டில் நாய், லவ் பேட்ஸ், கிளி வளர்த்து வரலாம். இதனை வளர்க்க முடியாதவர்கள் தென்னை மரம், வாழை மரம், பாக்கு மரம் வைத்து வீட்டில் வளர்க்கலாம். திருமண பிரச்சனை இருப்பவர்கள் இதனை செய்யலாம். தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும்.

துலாம்: துலாம் ராசியினர் புறா, பஞ்சவர்ணக்கிளி போன்றவைகளை வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக வீட்டில் மரங்களை வளர்க்க கூடாது. துலாம் ராசியினருக்கு நாய் ஒத்துவராத விலங்காகும். மாதுளை, ஆரஞ்ச், செம்பருத்தி செடிகளை வளர்க்கலாம். துலாம் ராசியினர் நாய் வளர்த்தார்கள் என்றால் தொற்று நோய், நாய் கடி போன்ற பல பிரச்சனை ஏற்பட கூடும். பறவைகளை வளர்த்து வந்தால் கணவன் மனைவி உறவானது பலப்படும்.

விருச்சிகம்: விருச்சிக ராசியினர் சேவல், காடை, பிராய்லர் கோழி வளர்க்கலாம். இதனை வளர்க்க முடியாதவர்கள் இலந்தை பழ செடி, கள்ளிச்செடி, எலுமிச்சை செடி வளர்க்கலாம். செய்வினை பயம் கொண்டவர்கள் இதனை தாராளமாய் வளர்க்கலாம். முக்கியமாக இந்த ராசியினர் ஆதாளி செடி வளர்ப்பது நல்லது. இதனால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைபெற்று இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் மயில், யானை வளர்க்கலாம். ஆனால் இதனை வளர்ப்பது கடினமான விஷயமாகும். இதற்கு பதிலாக பசு, மூங்கில், சவுக்கு மரம், ஆவாரம்பூ வளர்க்கலாம். குறிப்பாக வெளியில் சென்றால் தனுசு ராசியினர் மன வாழ்வு பிரச்சனை உள்ளவர்கள் குரங்குகளுக்கு தின்பண்டம் வாங்கி கொடுப்பதால் இந்த நிலை நீங்கும். குடும்பத்தில் தாம்பத்திய சுகம் நிலைபெறும்.

மகரம்: மகர ராசியினர் வீட்டில் பன்றி, கழுதை வளர்த்து வரலாம். வளர்க்க இயலாதவர்கள் நார்த்தங்காய் மரம், இலந்தை செடி, புளிய மரம், துளசி செடியினை வளர்க்கலாம். வீட்டில் இதனால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கக்கூடும். மகரம், கும்பம் ராசியினர் நாய் வளர்க்க கூடாது.

கும்பம்: கும்ப ராசியினர் குயில், கருங்குருவி வளர்க்கலாம். தினமும் காக்கைக்கு உணவு வைத்து வரலாம். கும்ப ராசியினர் வளர்க்க வேண்டியது பசு, சேவல் வளர்க்கலாம். இதனை வளர்க்க முடியாதவர்கள் வன்னி மரம், பனை மரம், முருங்கை, எலுமிச்சை மரம் வளர்க்கலாம். இதனால் தொழிலில் ஏற்படும்  பிரச்சனை நீங்கி தொழில் நன்கு மேம்படும்.முக்கியமாக கும்ப ராசியினர் நாய் வளர்க்க கூடாது.

மீன் கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.  கும்ப ராசியினர் மீன் வளர்த்தால் மனதில் நிம்மதி கிடைக்கும். அதோடு பொருளாதாரமும் மேம்படும். கும்ப ராசியினர் நாய் வளர்த்து வந்தால் வளர்க்கும் நாய்க்கு நோய்வாய் படும், அல்லது இறந்துவிடும். இல்லையென்றால் வளர்ப்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படும்.

மீனம்: மீன ராசியினர் ஆடு, கோழி, மீன் வளர்க்கலாம். வளர்க்க முடியாதவர்கள் புங்கை மரம், பூவரசு மரம், செம்பருத்தி செடி வளர்க்கலாம். இதனால் குடும்பத்தில் வருமான பிரச்சனை இருக்காது. அதோடு குடும்பத்தில் ஏற்படும்  பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மீன் வளர்ப்பதால் தங்களின் வாழ்க்கை செழிப்பாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். மீன் வளர்க்க இடம் இல்லாதவர்கள் மீன்களின் படங்களை வைத்தும் வரலாம்.

வீட்டில் பிராணிகளையோ, தாவர வகைகளையோ வளர்க்கும் போது சுத்தமாக வளர்த்தால் மட்டுமே வீட்டிற்கு அதிர்ஷ்டமும், சுபிட்ச வாழ்க்கையும் தேடி வரும். வீட்டின் நபர்களை போலவே பிராணிகளையும் பாதுகாக்க வேண்டும்.

newமீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..! List of fish names in tamil and english..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil