பிரித்து எழுதுக | Pirithu Eluthuga in Tamil
தமிழ் பற்று அதிகம் உள்ளவர்கள் தவிர, பொதுவாக ஒரு சொற்களை பிரித்து எழுதுவது எப்படி? என்று தெரிந்து கொள்பவர் யாரெல்லாம் இருப்பார்கள் தெரியுமா? அதாவது பள்ளிக்கி செல்லும் மாணவர்கள், பாடம் நடத்தும் ஆசிரியர்கள், மேலும் ஏதாவது அரசு பணிக்கு பயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டுமேதான் ஒரு சொல்லை எப்படி பிரித்து எழுத வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இருப்பினும் தமிழ் சார்ந்த நிறைய போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கூட ஒரு செல்லை பிரிந்து எழுதுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஆகவே இந்த பதிவில் சொற்களை பிரித்து எழுதுவது எப்படி என்று பட்டியலிட்டுள்ளோம். இது போட்டி தேர்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பிரித்து எழுதப்பட்டுள்ள சொற்களை ஒவ்வொன்றாக இப்பொழுது படித்தறியலாம்.
Pirithu Eluthu in Tamil:-
சொற்கள் |
பிரித்து எழுதுக |
மருட்டுரை |
மருள் + உரை |
உண்டினிதிருந்த |
உண்டு + இனிது + இருந்த |
சீறடி |
சிறுமை + அடி |
சீரடி |
சீர் + அடி |
பன்னலம் |
பல + நலம் |
வான்மதி |
வானம் + மதி |
முட்டீது |
முள் + தீது |
தேவாரம் |
தே + ஆரம் |
ராப்பகல் |
இரவு + பகல் |
தெண்ணீர் |
தெள் + நீர் |
நீனிலம் |
நீள் + நிலம் |
வாயிற்கெடும் |
வாயால் + கெடும் |
அங்கயற்கண் |
அம் + கயல் + கண் |
எஞ்ஞான்றும் |
எ + ஞான்றும் |
கட்புலம் |
கண் + புலம் |
கீழ்க்கடல் |
கிழக்கு + கடல் |
மூவைந்தாய் |
மூன்று + ஐந்தாய் |
இருகரை |
இரண்டு + கரை |
முன்னீர் |
முன் + நீர் |
ஆரிடை |
ஆ + இடை |
எந்நாள் |
எ + நாள் |
அந்நலம் |
அ + நலம் |
பூம்புனல் |
பூ + புனல் |
தீஞ்சுடர் |
தீமை + சுடர் |
தீந்தமிழ் |
தீம் + தமிழ் |
தன்னொலி |
தன்மை + ஒலி |
நற்செங்கோல் |
நன்மை + செம்மை + கோல் |
வெந்தழல் |
வெம்மை + தழல் |
சிற்றில் |
சிறுமை + இல் |
மெல்லடி |
மென்மை + அடி |
புன்மனத்தார் |
புன்மை + மனத்தார் |
பைந்தளிர் |
பசுமை + தளிர் |
கொண்டேந்திய |
கொண்டு + ஏந்திய |
முற்றிடத்து |
முற்று + இடத்து |
ஓரிரவு |
ஓர் + இரவு |
இன்றிளைப்பாறுவம் |
இன்று + இளைப்பாறுவம் |
உன்றன் |
உன் + தன் |
முன்னடக்க |
முன் + நடக்க |