மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2022..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

Pradhan mantri awas yojana scheme in tamil

ரூ 2.67 லட்சம் வரை அரசு மானியம் பெற்று புது வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி? PMAY Scheme Details in Tamil..!

பிரதமரின் இலவச வீடு திட்டம் 2022 / Pradhan mantri awas yojana scheme in tamil:-

Pradhan mantri awas yojana scheme in tamil/ மோடி வீடு திட்டம் 2022:- அனைவருக்கும் ஒரு லட்சிய கனவு இருக்கும், அதுதான் சொந்தமாக வீடு கட்டுவது. ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது பலருக்கு கனவாகவே இருந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பொருளாதார காரணம் என்று சொல்லலாம். இருந்தாலும் அனைவருமே சொந்தமாக வீடுகட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் தங்களுக்கு பெரிதும் உதவுகிறது. இது மத்திய அரசின் மிக சிறந்த திட்டம் என்றும் சொல்லலாம். இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் 2022 ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது. சரி இந்த பதிவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தில் அனைவரும் எப்படி பயன்பறலாம்? யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்? இந்த திட்டத்தில் எவ்வளவு மானியம் தொகை வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வங்கியை விட அதிக வட்டி தரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்..!
  • மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் – பிரதமரின் இலவச வீடு திட்டம் 2022 -Prathama Manthiri Yojana Scheme in Tamil..!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?

pradhan mantri awas yojana scheme

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது இந்தியாவில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும், இது பலவீனமான மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது 25 ஜூன் 2015 ஆண்டு செயல்முறைக்கு வந்து விட்டது. இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் தரமான வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம் 4 வகையாக பிரிக்கப்பட்டு மானிய தொகையினை வழங்கினார்கள். அதாவது EWS/LIG / MIG – I & II என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு, அந்த பிரிவுகளுக்கான மானிய தொகையினை வழங்குகின்றன. இதனை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா CLASS திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டு வருமானம் 18 லட்சம் கொண்டிருப்பவர்களும் பயன்பெறலாம்.

Credit Linked Subsidy Scheme:-

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா CLASS திட்டனின் கீழ் மானியம் பெறுவதற்கான தகுதி அடிப்படையானது குறைந்த வருவாய்க் குழு/பொருளாதாரரீதியில் பலவீனமான பிரிவு (EWS/LIG) மற்றும் நடுத்தர வருவாய்க் குழு (MIG – I & II) ஆகியவற்றுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினருக்கு இந்த திட்டத்தின் கீழ் வட்டி மானியம் ரூபாய் 2.67 லட்சம் வரை ஒரு வீட்டுக்கு பயனாளிக்கு அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் மார்ச் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் தகுதி / Pradhan Mantri Awas Yojana Eligibility in Tamil: 

இந்த திட்டம் முதன்மையாக அனைவருக்கு வீட்டு வசதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே ஏற்கனவே ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மையை பெற தகுதி கிடையாது.

EWS LIG MIG பிரிவினருக்கான ஆண்டு வருமான அளவுகோல் என்ன?

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருவாய் பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ரூபாய் 3ல் லட்சத்தில் இருந்து ரூபாய் 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். நடுத்தர வருவாய் பிரிவினருக்கான (MIG I) ஆண்டு வருமானம் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். MIG II க்கான ஆண்டு வருமானம் ரூபாய் 12 லட்சம் முதல் ரூபாய் 18 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

EWS & LIG பிரிவினருக்கு ஆண்டு வருமானம்:-

இவர்களுக்கான ஆண்டு வருமானம் EWS பிரிவினராக இருந்தால் 3 லட்சம் வரை இருக்க வேண்டும். LIG பிரிவினராக இருந்தால் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்கலாம். இவர்களுக்கு மானிய தொகை 6.5% வழங்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு மானியம் 6 லட்சம் வரை கிடைக்கும். இந்த 6 லட்சத்திற்கு 6.5% மானியம் என்றால் இவர்களுக்கு 2,67,280/- வரை மானியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,500/- என்று 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம். அதேபோல் EWS பிரிவினர்  30 சதுர அடி வரையும், LIG பிரிவினர் 60 சதுர அடி வரையும் அவர்களது வீட்டினை கட்ட முடியும்.

இந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..!

MIG I பிரிவினருக்கான ஆண்டு வருமானம்:-

இவர்களுக்கான ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்கு மானிய தொகை 4.0% வழங்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு கடன் 9 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த 9 லட்சத்திற்கு 4.0% மானியம் என்றால் இவர்களுக்கு 2,35,068/- வரை மானியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,250/- என்று 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம். அதேபோல் இவர்கள் 160 சதுர அடி வரை அவர்களது வீட்டினை கட்ட முடியும்.

MIG II பிரிவினருக்கான ஆண்டு வருமானம்:-

இவர்களுக்கான ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்கு மானிய தொகை 3.0% வழங்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு கடன் 12 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த 12 லட்சத்திற்கு 3.0% மானியம் என்றால் இவர்களுக்கு 2,30,156/- வரை மானியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,200/- என்று 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம். அதேபோல் இவர்கள் 200 சதுர அடி வரை அவர்களது வீட்டினை கட்ட முடியும்.

பிரதமரின் இலவச வீடு திட்டம் 2022 இந்த பயன்பெறுவதற்கான முடிவு காலம் / Pradhan mantri awas yojana scheme in tamil
MIG I & MIG II பிரிவினருக்கு31 மார்ச் 2022 வரை பயன்பெறலாம்
EWS & LIG பிரிவினருக்கு31 மார்ச் 2022 வரை பயன்பெறலாம்

 

புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள். இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் https://pmaymis.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேறொரு பதிவில் ஆன்லைன் மூலம்  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு (Pradhan mantri awas yojana scheme in tamil) எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil