” போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா..?

Pokathavanuku Police Velai Vakathavanuku Vathiyar Velai Vilakkam

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை ஏராளமான பழமொழிகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பழமொழிகள் நம்மை பொறுத்தவரை வெறும் வார்த்தையாக தான் இருக்கிறது. நாம் பேசும் ஒவ்வொரு பழமொழிக்கு பின்னால் நம் முன்னோர்கள் ஏதோ ஒரு காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இதுநாள் வரையிலும் நாம் சொல்லும் ” போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று தெறிந்துகொள்ள போகிறோம்.

கழுதை கெட்ட குட்டி சுவர் என்று திட்டுவதற்கான அர்த்தம் என்ன.?

” போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்ற பழமொழியின் அர்த்தம்:

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.அர்த்தம்

இன்றைய காலத்தை பொறுத்தவரை நிறைய வேலைகள் இருக்கிறது. நிறைய வேலைகள் இருந்தாலும் கூட அந்த வேலைகளுக்கான டிமாண்டும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

என்ன தான் நிறைய வேலைகள் வந்தாலும் கூட அரசு வேலைக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. இத்தகைய அரசு வேலையினை பெரியதாக நினைக்கும் நபர்கள் இன்று வரையிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட அரசு வேலையினை “போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்று கூறுவார்கள். ஆனால் இந்த பழமொழிக்கான அர்த்தம் என்னவென்றால்..?

ஒரு மனிதன் உலக நடைமுறைகளை பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு அவற்றை தவறாக கையாளும் மனிதர்களை திருத்தி நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பணியினை மற்றவருக்காக செய்பவர் தான் போலீஸ் அதிகாரிகள்.

 இவர்கள் தவறான வாழ்க்கையின் பாதையில் போகுபவர்களை நல்ல முறையில் போக செய்கிறார்கள். வாழ்க்கையை பற்றிய நிறைய போக்குகளை கற்று கொண்டதால் போலீஸ் அதிகாரிகளை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற அர்த்தத்தில் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்.  

“நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை” இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

வாத்தியவர் என்பவர் ஒரு மனிதனின் அடித்தள வாழ்க்கையினை தொடங்கி வைப்பவர் ஆவர். மாதா, பிதா, குரு மற்றும் கடவுள் என்று கூறுவார்கள். இதற்கான அர்த்தம் என்னவென்றால் ஒரு மனிதனை பெற்றுடுத்த தாய், தந்தைக்கு அடுத்த நிலையில் ஆசிரியர் இருக்கிறார்.

ஏனென்றால் ஆசிரியர் தான் நம் வாழ்க்கையை பற்றி சிந்தித்தித்து நம்மை நல்ல முறையில் வழிநடத்தி கொண்டு சென்று நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் வார்த்தைகள் மூலம் கற்று கொடுக்கிறார்.

 இது மாதிரி தாம் கற்றுக்கொண்ட வார்த்தைகளை மற்றவருக்கு அறிவு பூர்வகமாக எடுத்துரைக்கும் வாத்தியாரை தான் வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்று  அர்த்தத்தில் கூறுகிறார்கள்.  

இதுவே “போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்ற பழமொழிக்கான அர்த்தம் ஆகும்.

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil