பொங்கல் பரிசு ரூ.1,000 எப்போது வழங்கப்படும்.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு 2023 | Tamil Nadu Government Pongal Parisu 2023

Pongal Parisu Thoguppu 2023: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பரிசினை வருடம் தோறும் வழங்கி வருகின்றன. கடந்த வருடம் வாங்கப்பட்ட ஒரு சில பொங்கல் பரிசு பொருட்கள் தரம் குறைந்த பொருளாகவும் மற்றும் வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை வைத்தனர். ஆக இதனை கருத்தில் கொண்டு இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ரேஷன் அட்டை வகைகள் அதன் குறியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் 2023:

இந்த கூட்டத்தின் போது பொதுமக்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் பணமாக கொடுக்கலாம் என்றும். இந்த பணத்தை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது.

இருப்பினும் பல ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. ஆக ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பது தான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது.

இதனால், பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement