புஞ்சை நிலம் என்றால் என்ன..?

Punjai Land in Tamil

இன்றைய பதிவில் மிகவும் பயனுள்ள ஒரு தகவல் தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் பொதுவாக நாம் அனைவருமே நன்செய் மற்றும் புன்செய் நிலம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்படியென்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கும் நன்செய் மற்றும் புன்செய் நிலம் என்றால் என்ன என்பது பற்றி  தெரியவில்லை என்றால் பரவயில்லை. இன்றைய பதிவில் நாம் புன்செய் நிலம் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து புன்செய் நிலம் பற்றிய தகவல்களை முழுதாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

Punjai Land Meaning in Tamil:

What is punjai land in tamil

பொதுவாக புஞ்சை நிலம் அல்லது புன்செய் நிலம் என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலம் ஆகும். உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிப்பிடபடுகின்றன.

மேலும் ஆண்டுக்கு ஒரு போகம் வரை மட்டுமே வேளாண்மை செய்யும் நிலத்பகுதி புன்செய் நிலம் எனப்படும். குறிப்பாக இந்நிலத்தில் நீர் பாசனம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.

இதையும் படியுங்கள்=> புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு சோளம், கருஞ்சோளம், அரிசிக்கம்பு,  கருந்தினை, சிறுதினை, கேழ்வரகு (கேப்பை), வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற சிறுதானிய வகைகள் மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன.

புன்செய் நிலப்பகுதியில் பாசன வசதிக்காக சொட்டு நீர்ப்பாசனம், ஏரிப் பாசனம் அமைக்க தமிழக அரசு வழிவகை செய்து உதவிபுரிகின்றது. 5 ஏக்கருக்கும் குறைவாக சொந்த புன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பாக மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ அனாதீனம் நிலம் என்றால் என்ன

புன்செய் நிலத்தில் வீடு கட்டலாமா..?

கண்டிப்பாக கட்டலாம் என்று அரசு கூறியுள்ளது. பொதுவாக புன்செய் நிலப்பகுதியை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் மாறாக வீட்டு மனைகள் அமைத்து அதில் வீடுகளும் கட்டலாம் என்று அரசு கூறியுள்ளது.

சுமார் 100 லட்சம் ஏக்கருக்கும் மேலாக புன்செய் நிலங்கள் உள்ளது. 41 லட்சம் ஏக்கர் மட்டுமே நன்செய் நிலம் உள்ளதால் அரசு நன்செய் நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நன்செய் நிலத்தில் வீடுக்கட்டுவதை தடுத்து வருகின்றது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil