புதிய குடும்ப அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும்?

How to Get New Ration Card within 15 Days in Tamil

ரேஷன் கார்டு எத்தனை நாளில் வரும்? | How to Get New Ration Card within 15 Days in Tamil

குடும்ப அட்டை என்பது நியாய விலை கடையில் பொருட்களை மட்டும் வாங்க பயன்படாமல் இன்றைய கால கட்டத்தில் எரிவாயு பொருள் வாங்குவதற்கும், அனைத்து அடையாள ஆவணமாய் விளங்குகிறது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு அந்த விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் பெயர் வேறு எந்த ரேஷன் அட்டையிலும் இருத்தல் கூடாது. சரி வாங்க இந்த பதிவில் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்து எத்தனை நாளில் வரும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி?

புதிய ரேஷன் கார்டு எத்தனை நாளில் கிடைக்கும்?

முன்பெல்லாம் குடும்ப அட்டை அப்ளை செய்து வருவதற்கு இரண்டு மூன்று மாதங்கள் வரை ஆகும். ஆனால் இப்போதோ புதிதாக குடும்ப அட்டை அப்ளை செய்து 30 நாட்களுக்குள் வந்துவிடுகிறது. சில நேரங்களில் புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு 10 முதல் 15 நாட்களிலே வந்துவிடும்.

இந்த குடும்ப அட்டையானது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் தமிழக அரசானது ஸ்மார்ட் கார்டு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

குடும்ப அட்டை சேவைகள்:

  • சர்க்கரை
  • கோதுமை
  • எண்ணெய்
  • அரிசி, பருப்பு வகை
  • பரிசு பொருட்கள்
  • உதவித்தொகை மற்றும் இதர பொருட்கள்.

நீங்கள் ஏற்கனவே ஸ்மார்ட் கார்டு அப்ளை செய்து வரவில்லை என்றால் TNPDS என்ற வெப்சைட்டை செக் செய்யுங்கள். அப்போது உங்களுடைய குடும்ப அட்டையின் ஸ்டேட்டஸ் என்னவென்று தெரிந்துவிடும்.

உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து உள்ளே சென்றால் ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்துவிட்டால் ஸ்மார்ட் கார்டு 1பிரிண்டிங் செய்யப்பட்டதா இல்லையா என்று அதிலையே தெரிந்துவிடும்.

ஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?

 

ஒருவேளை பிரிண்டிங் செய்யப்பட்டது என்றால் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு உங்கள் ரேஷன் கார்டு எங்கு உள்ளது மற்றும் எங்கு சென்று வாங்க வேண்டும் என்பதை தங்களுக்கு ஒரு தகவல் மூலம் தெரிவிப்பார்கள்.

ரேஷன் கார்டினை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil