அரிய வகை பழம் | Rare Fruits in Tamil
Rare Fruits in India: நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் வகிப்பதில் முதன்மை இடத்தை கொடுப்பது பழ வகையே ஆகும். பழ வகைகளில் தான் ஏராளமான வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. இதுவரை இந்திய நாட்டில் மா, பலா, வாழை என்று முக்கனிகளையே பழ வகைகளில் பெரும்பாலும் அறிந்திருப்போம். ஆனால் இந்திய நாட்டில் நாம் இன்னும் அறிந்திராத அரிய பழ வகைகள் உள்ளன. இந்த அறிய பழ வகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பங்களிக்கிறது. நம் நாடுகளில் குறைந்தளவே உற்பத்தியில் இருப்பதால் சில அரிய வகை பழத்தின் நன்மைகள் நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. இந்த் பதிவில் அரிய வகை பழத்தின் பெயர்களை இப்போது படத்துடன் தெரிந்துக்கொள்ளுவோம்..!
பழங்களும் அதன் மருத்துவ பயன்களும் |
நட்சத்திர பழம் (காரம்போலா):
இந்த நட்சத்திர பழமானது இந்திய நாடுகளில் “காம்ராக்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பழம் இந்தியாவின் தெற்கு பகுதியில் வளர்க்கப்பட்டு வருகின்றனர். நட்சத்திர பழமானது பழுக்காத வடிவில் அதிக புளிப்பு சுவையினை உடையதாக இருக்கும். பழுத்த வடிவில் உள்ள நட்சத்திர பழம் மஞ்சள் நிறத்தில் தென்படும். நம்முடைய உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய பழ வகைகளில் ஒன்றுதான் இந்த நட்சத்திர பழம்.
லக்கோட்டா பழம் (லாங்சாட்):
லக்கோட்டா பழம் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவின் ஒரு சில இடத்தில், முக்கியமாக நீலகிரி மலை பிரதேசத்தில் பயிரிடப்பட்டு வருகிறது. லாங்சா பழமானது சிறிய உருண்டை வடிவில் காட்சி தரக்கூடிய அற்புதமான பழம். இந்த பழமானது பழுக்காத நிலையில் இருக்கும் போது புளிப்பு சுவையுடனும், பழம் நன்கு பழுத்த பிறகு நல்ல இனிப்பு சுவையுடனும் இருக்கும். இந்த லக்கோட்டா பழத்தின் சுவையானது புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட திராட்சை பழம் போன்று இருக்கும்.
சால்டா பழம் (யானை ஆப்பிள்):
அஸ்ஸாம், கொல்கத்தா, பீகார், ஒடிசா மற்றும் குமாவோன் முதல் கர்வால் வரையிலான துணை இமயமலைப் பிரதேச பாதையில் காணப்படும் சல்தா பழமானது ஒரு திராட்சைப்பழம் அளவிலான பழம். இந்த அரிய வகை சல்தா பழம் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கூடிய ஒன்று. இந்த பழத்தின் கூழானது புளிப்பு சுவையும், கறி, ஜாம் மற்றும் ஜெல்லிகளில் இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வன பகுதிகளில் வாழும் யானைகள், குரங்குகள் மற்றும் மான்களுக்கு உணவின் முக்கிய ஆதாரமாக யானை ஆப்பிள் உள்ளது.
அரியவகை பழங்களும் அதன் பலன்களும் |
ஃபால்சா பழம் (இந்தியன் ஷெர்பெட் பெர்ரி):
இந்த ஃபால்சா பழம் முதல் முதலாக வாரணாசி பகுதியில் பார்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதை புத்த மதத்தினை சார்ந்தவர்கள் ஆசிய நாடுகள் மற்றும் மற்ற நாடுகளுக்கு பரப்பினர் என்று கூறப்படுகிறது. ஃபால்சா பழம் இனிப்பு மற்றும் புளிப்பு அமில சுவைக்காக பயிரிடப்படுகிறது. கோடை காலத்தில் அதிகளவு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பழத்தின் கூழுடன் சர்க்கரை சேர்த்து குளுரூட்டம் செய்து பயன்படுத்தலாம்.
கரோண்டா பழம் (கராண்டாஸ் செர்ரி):
பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்படும் பழ வகையாகும். இந்த கரோண்டா பழமானது இளஞ்சிவப்பு நிறத்தினை கொண்ட சிறிய பழமாகும். இந்த பழம் அதிகமாக புளிப்பு சுவை கொண்டுள்ளதாக இருக்கும். பழம் பச்சையாக இருக்கும்போது கல் உப்பு சேர்த்து சாப்பிடலாம். பழமானது நன்றாக பழுத்த பிறக , அது மென்மையாகவும், அதிக மனம் கொண்டதாகவும், சுவை அதிகம் உள்ளதாகவும் இருக்கும். இந்த கரோண்டா பழத்தை ப்ளூ பெர்ரிக்கு பதிலாக நீங்கள் சாப்பிடலாம். இந்த பழம் சாஸ்கள் மற்றும் ஊறுகாய்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
ஜங்லி ஜலேபி பழம் (காமச்சில்):
ஜங்லி ஜலேபி பழம் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த பழத்தில் சுமார் 6-10 கருப்பு விதைகள் காணப்படுகிறது. இந்த பழத்தில் அதிகமாக இனிப்புச் சுவை இருக்கும். எலுமிச்சை பழத்தில் ஜூஸ் தயாரிப்பது போன்று இந்த பழத்திலும் ஜூஸ் தயாரிக்கலாம். மேலும் இதை சாப்பிடும் போது ஜூலேபி ஸ்வீட் போல தித்திக்கும். அதனால் இந்த பெயர் இதற்கு வந்தது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |