குழந்தைகளுக்கான விடுகதைகள் | Riddles for Kids in Tamil

Riddles for Kids in Tamil

குழந்தைகளுக்கு விடுகதை | Tamil Riddles for Kids

Riddles for Kids in Tamil:- நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.. பொதுவாக குழந்தைகளுக்கு கதைகள் கேட்க எவ்வளவு பிடிக்குமோ. அதே அளவிற்கு விடுகதை என்றாலும் அதிகளவு பிடித்த விஷயமாகும். குழந்தைகளுக்கு கதைக‌ள் சொ‌ல்வது போ‌ல் விடுகதைகளு‌ம் சொ‌ல்‌லி‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம். அப்பொழுது தான் அவ‌ர்களது ‌சி‌ந்தனை‌த் ‌திறனை அதிகரிக்க முடியும். சரி குழந்தைகளின் அறிவு திறன் மற்றும் சிந்தை திறனை அதிகரிக்க உதவும் ‌குழந்தைகளுக்கான விடுகதைகள் சிலவற்றை இங்கு படித்தறியலாம் வாங்க..

இதையும் படியுங்கள் –> சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்

குழந்தைகளுக்கான விடுகதைகள் | Kids Tamil Riddles

1 தொப்பி போட்ட காவல்காரன் உரசி விட்டால் சாம்பல் ஆவான் அவன் யார்?

விடை: தீக்குச்சி 

2 ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுள்ளே வரமாட்டன் அவன் யார்?

விடை: செருப்பு 

3 ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் அவன் யார்?

விடை: சூரியன்

4 தொட்டு விட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்து விடுவான் அவன் யார்?

விடை: மருதாணி 

5 பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் கண்டுபிடிங்கள் பார்ப்போம்?

விடை: புடலங்காய்

இதையும் படியுங்கள் –> தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்

 

6 சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம் அது என்ன?

விடை: பச்சைக்கிளி 

7 கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது அது என்ன? 

விடை: இளநீர்

8 சேற்றுக்குள்ளே வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் அது என்ன? 

விடை: தாமரை பூ, சூரியன் 

9 வண்ண வண்ண பட்டு சேலைக்காரி, நீலவண்ண ரவிக்கைக் காரி அவள் யார்?

விடை: மயில் 

10 உரச உரச கரைவான், பூச பூச மணப்பான் அவன் யார்?

விடை: சந்தனம் 

மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
விடுகதைகள் | Vidukathaigal
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
விடுகதை விளையாட்டு விடைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil