சேலை கனவில் வந்தால் என்ன பலன் | Saree Kanavil Vanthal Enna Palan
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் நம்முடைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக நாம் தூங்கும் போது ஆழ்ந்த கனவில் புடவை வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக பெண்களுக்கு புடவையானது மரியாதைக்குரிய விஷயமாக இருக்கிறது. பெண்கள் சேலை அணிவது நாட்டின் கலாச்சாரமாக இன்றும் பின் பற்றி வருகிறார்கள்.
ஆகவே நாம் அன்றாடம் புடவையை காண்போம். அப்படி இருக்கையில் புடவை நம் கனவில் வருவது சாதாரண விஷயம் தான். ஆனால் புடவை கனவில் வந்தால் சில நல்ல பலன்கள் மற்றும் கெட்ட பலன்கள் இருக்கின்றன. அந்த வகையில் உங்களுடைய கனவில் ஒவ்வொரு வண்ணம் கொண்ட புடவை கனவில் கண்டால் என்ன பலன் என்று இந்தப் பதிவை படித்து தெரிந்துக் கொள்ளுவோம் வாங்க.
துணி கனவில் வந்தால் என்ன பலன்? |
புடவை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
Pudavai Kanavu Palangal in Tamil: புடவை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் உங்களைப் பற்றி நீங்கள் நேர்மறையாக உணர்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் எப்போதும் நல்ல தருணங்களை மட்டும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறீர்கள் என்று கனவானது உணர்த்துகிறது. அருகில் இருக்கும் அனைவரிடமும் தொடர்ந்து நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறீர்கள் என்பதை குறிக்கும் விதமாக அமைகிறது.
புடவை அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் புடவை அணிவது போல் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நீங்களே உங்களுடன் சுமந்து செல்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. பிரச்சனைகளை ஆராய்ந்து விரைவில் அதிலிருந்து வெளிவந்தால் மட்டுமே வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
கனவில் புதிய புடவை எடுப்பது போல் கண்டால் என்ன பலன்:
புதிய சேலை எடுப்பது போல் கனவில் வந்தால் உடலில் சிறு சிறு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல்நலனில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பச்சை புடவை கட்டிய பெண் கனவில் வந்தால் என்ன பலன்:
saree kanavu palangal in tamil: கனவில் பச்சை புடவை கட்டிய பெண் வந்தால் சுப நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
சிவப்பு நிற புடவை கட்டிய பெண் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் சிவப்பு நிற புடவை உடுத்திய பெண் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று இந்தக் கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.
திருமணத்திற்கு புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
உங்களுடைய கனவில் திருமணத்திற்கு புடவை வாங்குவது போல் கண்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலனில் ஏதோ பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தமாகும்.
கனவில் வெள்ளை புடவை அணிந்த பெண் வந்தால் என்ன பலன்:
வெள்ளை பட்டுப்புடவை அணிந்த பெண்ணை கனவில் கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் செல்வம் சேர போகிறது என்று அர்த்தம்.
மஞ்சள் புடவை கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் மஞ்சள் புடவையை கண்டால் நீங்கள் வேண்டுதல் எதையோ நிறைவேற்றாமல் இருக்குறீர்கள் என்று கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது. ஏதோ ஒரு விஷயத்திற்காக நீங்கள் செய்த வேண்டுதலை மறந்து விட்டீர்கள். வேண்டுதலை உடனடியாக தெரிந்து கொண்டு நிறைவேற்றவும்.
கருப்பு நிற புடவை அணிவது போன்று கண்டால் என்ன பலன்:
கனவில் நீங்கள் கருப்பு நிற புடவையை அணிவது போன்று வந்தால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஏதோ ஒரு பிரச்சனையிலிருந்து உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அதிலிருந்து விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |