சிறுபஞ்சமூலம் நூல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Sirupanjamoolam Nool in Tamil..!

ஹலோ நண்பர்களே… இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் சிறுபஞ்சமூலம் நூல் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம். நம் தமிழ் மொழியில் பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது சிறுபஞ்சமூலம் நூல். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஓன்று. இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்யுள்கள் எளிய நடையில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்நூல் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க…

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு

சிறுபஞ்சமூலம் நூல் குறிப்பு: 

சிறுபஞ்சமூலம் எனும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஓன்று. இந்நூல் மொத்தம் 100 பாடல்களை கொண்டுள்ளது. இந்த சிறுபஞ்சமூலம் நூலை எழுதியவர் காரியாசான் ஆவார். சிறுபஞ்சமூலம் என்பது 5 சிறிய வேர்கள் என்று பொருள் தருகிறது.

அவை சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது. இந்த வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்படுத்துவது போல இந்நூல்  கூறப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நூல்

இந்நூலில் 102 கடவுள் வாழ்த்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் என்று கூறப்படுகிறது. அதுபோல சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள 5 கருத்துக்கள் அனைத்தும் மக்களின் அறியாமை என்னும் இருளை போக்கி அவர்களை நல்வழிபடுத்துவதாக அமைந்துள்ளன.

இந்நூலில் மூலம் என்பது வேர் என்று பொருள் தருகிறது. இந்நூலில் அறிவுரை கூறும் 311 பாடல்கள் உள்ளன. இந்நூலின் இறுதியில் சிறப்புப் பாயிரம் என்று சொல்லக்கூடிய 2 பாடல்கள் உள்ளன. இந்த சிறுபஞ்சமூலம் நூல் சங்கம் மருவிய கி.பி. 3 ஆம் நூற்றாண்டு கால நூல் என்று கூறப்படுகிறது. 4 வரிகளிலே 5 பொருள்களை அமைத்துப் பாடும் திறம் சிறுபஞ்சமூலம் நூலின் சிறப்பு ஆகும்.

மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பு

சிறுபஞ்சமூலம் ஆசிரியர் குறிப்பு:

சிறுபஞ்சமூலம் நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரது இயற்பெயர் காரி என்பதே ஆகும். ஆசான் என்பது இவர் செய்த தொழிலை குறிக்க பயன்படுத்திய பெயராக இருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. பாயிரச் செய்யுள் இவரை மாக் காரியாசான் என்று சிறப்பிக்கின்றது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இந்த சிறுபஞ்சமூலம் நூலின் காப்புச் செய்யுளால் காரியாசான் சைன சமயத்தார் என்பதை அறிய முடிகின்றது.

காரியாசான் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது இந்த நூலின் பாயிரச்செய்யுளிலிருந்து தெரியவருகிறது. அதாவது, காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. திணைமாலை நூற்றைம்பது மற்றும் ஏலாதி ஆகிய நூல்களை எழுதிய ஆசிரியரான கணிமேதாவியாரும் இந்த மாக்காயனாரின் மாணவர் ஆவார். கணித மேதாவியார் மற்றும் காரியாசான் ஒரே குருவிடம் பாடம் பயின்றவர்கள் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement