சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்
இலக்கியங்களில் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரண்டு வகைகள் உள்ளன. நாம் இந்த பதிவில் சிற்றிலக்கியம் பற்றி பார்க்கலாம். நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு சிறப்புகளையும், ஒவ்வொரு கருத்துக்களையும் பெற்றுள்ளன. இப்பொழுது நாம் சிற்றிலக்கியம் என்றால் என்ன? சிற்றிலக்கியத்தின் சிறப்புகள் மற்றும் சிற்றிலக்கியத்தின் வகைகள் பற்றி விரிவாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிற்றிலக்கியம் என்றால் என்ன? – Sitrilakiyam:
- சிற்றிலக்கியம் என்பது பாடலில் உள்ள எண்ணிக்கை அல்லது பாடல் வரிகளில் உள்ள எண்ணிக்கை சுருக்கமாக அதாவது குறைவான பாடல் அடிகளை உடைய இலக்கியங்களை நாம் சிற்றிலக்கியம் என்கிறோம்.
- இந்த வகை இலக்கியங்களில் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய நான்கு வகை பொருள்களில் ஏதேனும் ஒன்று குறைவாக காணப்பட்டாலும் அவை சிற்றிலக்கிய வகைகளில் அடங்கும்.
- அகப்பொருள் மற்றும் புறப்பொருள் இவற்றில் ஏதேனும் ஒரு துறையை பற்றி மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். கோவை போன்ற சிற்றிலக்கியங்கள் பல துறைகளை கொண்டும் அமைவது உண்டு.
Sitrilakiyam Endral Enna:
- ஒரு பாடலில் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் போன்றவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கூறு மட்டுமே விளக்கப்பட்டிற்கும்.
- உதாரணத்திற்கு உலா இலக்கியத்தில் தலைவன் உலா வரும் காட்சி மட்டுமே சிறப்பாக கூறப்பட்டிருக்கும். பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி பல இல்லக்கியங்கள் சிற்றிலக்கியங்களாகும்.
- வடமொழியில் சிற்றிலக்கியம் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரபந்தம் எனும் சொல் சமஸ்கிருதத்தில் கட்டப்பட்டது என்று பொருள்படும்.
சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலம் எது?- Sitrilakiyam Kaalam
நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர தொடங்கின. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை அதிக அளவு சிற்றிலக்கியங்கள் தோன்றியதால் அதனை சிற்றிலக்கிய காலம் என்று அழைப்பார்கள்.
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை – Sitrilakiyam:
- 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன என்று பண்டைய காலத்தில் கூறப்படுகிறது. ஆனால் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. தற்காலத்தில் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 186 அல்லது 417 வரை இருக்கலாம் என்ற கருத்து அறிஞர்களிடம் உள்ளது.
- 96 வகை சிற்றிலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 14 சிற்றிலக்கியங்களே அவை
- ஆற்றுப்படை
- அந்தாதி
- மாலை
- பதிகம்
- கோவை
- உலா
- பரணி
- கலம்பகம்
- பிள்ளைத் தமிழ்
- தூது
- சதகம்
- மடல்
- பள்ளு
- குறவஞ்சி
96 சிற்றிலக்கியங்கள் – Sitrilakiyam Vagaigal 96
சிற்றிலக்கியங்கள் 96 வகைகள் | ||
அகப்பொருட்கோவை | இரட்டை மணிமாலை | ஊர் நேரிசை |
அங்க மாலை | இருபா இருபது | ஊர் வெண்பா |
அட்டமங்கலம் | உலா | ஊர் இன்னிசை |
அரசன் விருத்தம் | பவனிக்காதல் | என் செய்யுள் |
அலங்கார பஞ்சகம் | உலாமடல் | ஐந்திணைச் செய்யுள் |
அனுராக மாலை | உழத்திப் பாட்டு | ஒருபா ஒருபது |
ஆற்றுப்படை | உழிஞை மாலை | ஒலியந்தாதி |
இணைமணி மாலை | உற்பவ மாலை | கடைநிலை |
இயன்மொழி வாழ்த்து | ஊசல் | கண்படைநிலை |
கலம்பகம் | கைக்கிளை | செருக்களவஞ்சி |
காஞ்சி மாலை | கையருநிலை | செவியறிவுறூஉ |
காப்பு மாலை | சதகம் | தசங்கத்யல் |
குழமகன் | சாதகம் | தசங்கப்பத்து |
குறத்திப்பாட்டு | சிறு காப்பியம் | தண்டக மாலை |
கேசாதி பாதம் | சின்னப்பூ | தாண்டகம் |
தாரகை மாலை | நவமணி மாலை | பதிற்றந்தாதி |
தானை மாலை | நாம மாலை | பரணி |
எழுகூற்றிருக்கை | நாழிகை வெண்பா | பல்சந்த மாலை |
தும்பை மாலை | நான்மணிமாலை | பன்மணி மாலை |
தியிலேடை நிலை | நான் நாற்பது | பாதாதி கேசம் |
தூது | நூற்றந்தாதி | பிள்ளைக் கவி |
தொகைநிலைச் செய்யுள் | நொச்சி மாலை | புகழ்ச்சி மாலை |
நயனப்பத்து | பதிகம் | புற நிலை |
புறநிலை வாழ்த்து | பேருமங்கலம் | மும்மணிக்கோவை |
பெயர் நேரிசை | போர் கேளு வஞ்சி | மும்மணி மாலை |
பெயர் இன்னிசை | மங்கல வள்ளை | முலைப் 10 |
பெருங்காப்பியம் | மணி மாலை | மெய்கீர்த்தி மாலை |
பெருமகிழ்ச்சி மாலை | முதுகாஞ்சி | வசந்த மாலை |
வரலாற்று வஞ்சி | வருக்கக் கோவை | வருக்க மாலை |
வளமடல் | வாகை மாலை | வாதோரணம் மஞ்சரி |
வாயுரை வாழ்த்து | விருதவிலக்கணம் | விளக்குநிலை |
வீரவெட்சிமலை | வெட்சிகறந்தைமஞ்சுறி | வெனில்மலை மற்றும் வண்ணம் |
சிற்றிலக்கியங்களின் சிறப்புகள் – Sitrilakiyam:
- தமிழ் பண்பாடு, தமிழின் சிறப்பை மற்றும் கற்பனை ஆற்றலை பெருக்குவதற்கும் சிற்றிலக்கியங்கள் பெரிதும் உதவுகிறது.
- பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை பள்ளு என்ற சிற்றிலக்கியம் மூலம் அறியலாம்.
- ஊரின் வரலாறு, புராண கதைகள், மக்களின் வழிப்பாட்டு முறையை தெய்வங்கள் மீது உள்ள சிற்றிலக்கியம் மூலம் அறியலாம்.
- பாடல் அடிகளில் குறைவான அளவு இருந்தாலும் பாடலுக்கு ஏற்ற கருத்தை அழகாக தருகிறது. தமிழின் வளர்ச்சிக்கு சிற்றிலக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள் |
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |