ஐந்து வகை இலக்கணம் – Tamil Ilakkanam Ethanai Vagai Padum
தமிழ் மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. ஆகவே இந்த மூன்றையும் சேர்த்து தான் முத்தமிழ் என அழைக்கபடுகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். இந்த இலக்கணம் எத்தனை வகைப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
Tamil Ilakkanam Ethanai Vagai Padum – நமது தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை என்னென்ன என்பதை பற்றி கீழ் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- எழுத்து
- சொல்
- பொருள்
- யாப்பு
- அணி
இந்த ஐந்து வகை இலக்கணம் பிரிவுகளை கொண்டது தான் தமிழ் இலக்கணம்.
சொல் என்றால் என்ன? |
எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும்?
எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும்.
எழுத்து – மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து இலக்கணம் வகைகள் | |
முதலெழுத்துக்கள் | சார்பெழுத்துக்கள் |
1. உயிரெழுத்து 2. மெய்யெழுத்து |
1. உயிர்மெய் எழுத்து 2. ஆய்த எழுத்து 3. உயிரளபெடை 4. ஒற்றளபெடை 5. குற்றியலுகரம் 6. குற்றியலிகரம் 7. ஐகாரக் குறுக்கம் 8. ஔகாரக் குறுக்கம் 9. மகரக்குறுக்கம் 10. ஆய்தக்குறுக்கம் |
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் |
சொல் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
சொல் இலக்கணம் நான்கு வகைப்படும். ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். அவை,
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1 அகப்பொருள்
2 புறப்பொருள்
யாப்பிலக்கணம் என்றால் என்ன?
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.
இலக்கணம் என்றால் என்ன? |
யாப்பின் உறுப்புகள்:
யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு. யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
1 எழுத்து
2 அசை
3 சீர்
4 தளை
5 அடி
6 தொடை
யாப்பின் அடிப்படையில் பா வகைகள்:
1 வெண்பா
2 ஆசிரியப்பா
3 கலிப்பா
4 வஞ்சிப்பா
அணி இலக்கணம் எத்தனை வகைகள்:
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
1 தன்மையணி
2 உவமையணி
3 உருவக அணி
4 பின்வருநிலையணி
5 தற்குறிப்பேற்ற அணி
6 வஞ்சப் புகழ்ச்சியணி
7 வேற்றுமை அணி
8 இல்பொருள் உவமையணி
9 எடுத்துக்காட்டு உவமையணி
10 இரட்டுறமொழிதலணி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |