தெனாலி ராமனின் ராஜகுரு நட்பு..! Tenali Raman Kathai..!
Tenali Raman Stories Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று பொதுநலம்.காம் பதிவில் தெனாலியின் ராஜகுரு நட்பு வளர்ந்த கதைகளை பற்றி தான் இன்றைய பொதுநலம் பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். அன்றைய காலம் முதல் இன்றைய காலத்திலும் கூட குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்பது நம் நாட்டின் பாரம்பரிய வழக்கமாகிவிட்டது. இன்றும் இந்த நிலை மாறாமல் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சரி வாங்க இப்போது ராஜகுருவின் நட்பை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
![]() |
விஜயநகர மன்னர் ராஜகுரு:
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் ராய் இருந்த தாத்தாச்சாரியார் அரண்மனையின் ராஜகுருவாக இருந்து வந்தார். தெனாலிராமன் வசித்து வரும் கிராமத்துக்கு பக்கத்திலுள்ளது “மங்களகிரி” எனும் கிராமம். ஒருநாள் அந்த மங்களகிரி கிராமத்திற்கு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.
ராஜகுருவின் நட்பு கிடைத்த தெனாலி:
மங்களகிரியில் வாழ்ந்து வந்த அனைவரும் ராஜகுருவிடம் ஆசி பெற்றனர். தெனாலிராமன் ராஜகுருவை நேரில் சந்தித்தான். தெனாலியின் திறமையினாலும், பேச்சாற்றலாலும் ராஜகுருவை வென்று ராஜகுருவிற்கு சிஷ்யன் ஆகிவிட்டான் தெனாலி.
ராஜகுருவிடம் உதவி கேட்ட தெனாலி:
தெனாலிக்கு ராஜகுருவின் நட்பு கிடைத்த பிறகு ராஜகுருவிடம் தன் குடும்ப நிலையானது மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்றான் தெனாலி. அதனால் கிருஷ்ணதேவராய மன்னரிடம் பேசி அரண்மனையில் தனக்கு வேலை கிடைக்கும்படி கேட்க சொன்னான் தெனாலிராமன். தெனாலி ராஜகுருவிடம் கேட்டபடியே ராஜகுருவும் அரண்மனை வேலையில் சேர்த்துவிடுவதாக கூறினான்.
தெனாலியை ஏமாற்றிய ராஜகுரு:
தெனாலியிடம் வாக்குக்கொடுத்த ராஜகுரு நான் அரண்மனைக்கு சென்றதும் ஆள் அனுப்பிவிடுகிறேன் அதன் பின் தெனாலியை வரசொல்லிவிட்டு விஜயநகரம் சென்றார் ராஜகுரு.
ராஜகுருவின் மனதில் தெனாலியை வேலைக்கு சேர்ப்பதில் மனம் இல்லை. தெனாலி மிகவும் திறமைசாலியாக இருப்பதனால் மன்னரிடம் இதை பற்றி சொன்னால் தனது வேலை போய்விடும் என்ற எண்ணத்தில் தெனாலிக்கு ராஜகுரு கடைசிவரையிலும் ஆட்களை அனுப்பிவைக்கவில்லை.
![]() |
காத்திருந்த தெனாலி ராமன்:
தெனாலி ராமனும் ராஜகுருவிடம் இருந்து வேலையில் சேருவதற்கு ஆள் வரும் என்று காத்திருந்து மாதங்களும் பல ஆகிவிட்டன. ராஜகுருவிடமிருந்து எந்த ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை. அதனால் தெனாலி ஒரு முடிவு எடுத்தான். விஜயநகரம் சென்று ராஜகுருவை பார்த்து அரண்மனை வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று தெனாலி முடிவு எடுத்துவிட்டான்.
விஜயநகரம் அடைந்தான் தெனாலி:
தெனாலி அவனது மனைவி, மகனுடன் பல நாட்களாக நடந்தே விஜயநகர இடத்தை தெனாலி அடைந்துவிட்டான்.
ராஜகுருவை சந்தித்த தெனாலி:
பல இன்னல்களையும் கடந்து தெனாலிராமன் ராஜகுருவை அவனது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனை பார்த்ததும் ராஜகுரு மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தெனாலியை பார்த்து ராஜகுரு யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும் தெனாலி அதிர்ச்சியில் ஆழ்ந்து நின்றான்.
ராஜகுருவிடம் வினவிய தெனாலி:
ராஜகுருவிடம் என்னை தெரியவில்லையா நான் தான் தெனாலி. நீங்கள் ஒருமுறை மங்களகிரி கிராமத்திற்கு வந்தபோது நாம் இருவரும் நண்பர்கள் ஆனோம் என்றான் தெனாலி. நான் உங்களிடம் அரண்மனையில் வேலை செய்ய உதவி கேட்டேன். அதற்கு நீங்களும் நான் சேர்த்துவிடுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு சென்றீர்கள்.
நான் விஜயநகரம் சென்றதும் ஆள் அனுப்பி வைத்ததும் என்னை வர சொன்னீர்கள். ஆனால் பல மாதங்கள் ஆகிவிட்டன. தங்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதனால் நானே நேரில் வந்துள்ளேன். மன்னரிடம் என்னை பற்றி கூறி அரண்மனை வேலையில் சேர்த்துவிட சொல்லி ராஜகுருவிடம் தெனாலி கூறினான்.
தெனாலியை விரட்டிய ராஜகுரு:
ராஜகுரு தெனாலியை பார்த்து உன்னை யாரென்று எனக்கு தெரியாது. மரியாதையாக வெளியில் போ இல்லையென்றால் அவமானப்பட்டுவிடுவாய் என்று கூறி விரட்டி அடித்தான் ராஜகுரு. அரண்மனையில் இருந்து தெனாலி வெளியேறிய பிறகு ராஜகுருவை பழிக்கு பழி வாங்க துடித்து காளி மஹாதேவியை துதித்தான்.
![]() |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |