தீதும் நன்றும் பிறர் தர வாரா பொருள் | Theethum Nandrum Pirar Thara Vaara Meaning in Tamil

Theethum Nandrum Pirar Thara Vaara Meaning in Tamil

தீதும் நன்றும் பிறர் தர வாரா | Theethum Nandrum Pirar Thara Vaara Tamil Meaning

Theethum Nandrum Pirar Thara Vaara Meaning in Tamil: பொதுநலம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்..! இந்த பதிவில் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கு கணியன் பூங்குன்றனார் அருமையான விளக்கத்தினை எடுத்துரைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இவர் எழுதிய உலக புகழ்பெற்ற “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் உலகத்தில் இன்றும் புகழ்பெற்று இருக்கிறது. கணியன் பூங்குன்றனார் சங்க கால புலவர்-களில் ஒருவர். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார். இவரின் தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் வரிகளின் பொருளை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

ஆத்திசூடி விளக்கம்
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்பதன் பொருள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா பொருள்:

ஒவ்வொருவரின் எண்ணம் அழகாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையும் அழகாக இருக்கும். அடுத்தவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளின் பிரதிபலிப்பு நமக்கு திரும்ப கிடைக்கும்போது இரண்டு மடங்காக கிடைக்கும். இதுவே நன்மை இல்லாமல் தீமையாக இருக்கும் பட்சத்தில் அதனுடைய பிரதிபலிப்பு பலமடங்கு நமக்கு கிடைக்கும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா..! என்பது கூட இதைப் பொறுத்துதான்… நல்லதைப் பேசி நல்லதை மட்டும் மனதில் நினைத்து நல்லதை மட்டுமே இறைவனிடம் வேண்டுங்கள். நல்ல பலனை அடைவீர்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதன் எடுத்துக்காட்டு:

செல்வம் எனும் இளைஞன் கனகபுரி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனுடைய வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல் கடவுள் அப்படிப்பட்ட வாழ்க்கையை அவனுக்கு கொடுத்திருந்தார். இருந்தாலும் அந்த இளைஞன் அடுத்தவர்களுடைய சந்தோஷத்தை பார்த்து மனதில் பொறாமை குணம் கொள்வான்.

ஒருமுறை செல்வம் என்ற அந்த இளைஞன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் கண்ணில் வனதேவதை காட்சி அளித்தாள். அவனிடம் வனதேவதை மானிடர்கள் என்னை பார்த்துவிட்டால் அவர்கள் கேட்கும் வரத்தினை நான் கொடுக்க வேண்டும் என்று இறைவன் எனக்கு கட்டளை விட்டு இருக்கிறான். உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் நான் அந்த வரத்தை கொடுக்கிறேன் என்று வனதேவதை இளைஞன் செல்வத்திடம் கூறியது.

இளைஞனும் உடனே மனதில் நான் நினைத்தது அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று வனதேவதையிடம் கேட்டான். வனதேவதை அவனிடம் மனதில் நீ நினைப்பது தீய எண்ணம் இல்லாமல் நல்லதாக மட்டுமே இருக்க வேண்டும். நல்லதாக இருந்தால் மட்டுமே மனதில் நீ நினைத்தது உடனடியாக நடக்கும் என்றது வனதேவதை.

பிறருக்கு கெடுதல் நினைத்தால் அவர்களுக்கு பதிலாக உனக்குத்தான் நடக்கும். பிறகு நீ நினைத்த நல்ல காரியம் உனக்கு நடக்காது என்று எச்சரிக்கை செய்தது. வரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவனுக்கு வனதேவதை கூறிய எதுவும் காதில் விழவில்லை. மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றான்.

வீட்டிற்கு இளைஞன் வந்தவுடன் என்ன உணவு இது? எப்போதும் ஒரே மாதிரியாக உணவு இருக்கிறது ருசி இல்லாமல், நாக்கிற்கு சுவையூட்டும் வகையில் வித விதமான உணவு வகைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்த உடனே அவன் முன்னால் பல உணவு வகைகள்  தட்டில் நிரம்பி வழிந்தன. அனைத்தையும் உண்டு மகிழ்ந்தான். உணவு உண்ட பிறகு அப்படியே பஞ்சு போன்ற மெத்தையில் தலை வைத்து உறங்கினால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று மனதில் நினைத்த அடுத்த நிமிடம் பஞ்சு மெத்தையில் அமர்ந்தான்.

இப்படியே இளைஞனின் நாட்கள் கடந்து சென்றது. யாருக்கும் எந்த தீங்கும் நடக்காமல் இவனுக்குத் தேவையானது மட்டும் வேண்டும் போது அனைத்தும் இவனுக்கு உள்ளபடி கிடைத்தது. இதனால் பெருமகிழ்ச்சியுடன் வாழ்வை கழித்தான்.

அந்த இளைஞன் மெதுவாக அருகில் உள்ள வீட்டை எட்டிப்பார்த்தான்… எல்லாம் கிடைத்திருக்கும் நாம் சந்தோஷமாக இருப்பது சரிதான். ஆனால் இவனும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று மனதில் நினைத்தான். வனதேவதை இவனிடம் கூறியதை மறந்தான்.

மனதில் அந்த இளைஞன் அவனுடைய வீடு உடனடியாக இடிந்து விழ வேண்டும்  என்று நினைத்தான். இவன் மனதில் நினைத்த அனைத்து ஆசைகளும் அடுத்த நிமிடம் கிடைத்தது போன்று அடுத்த நொடி இவனது வீடு இடிந்து இவன் மேலேயே விழுந்துவிட்டது.’ கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது போல நாம் மனதில் நினைக்கும் தீய எண்ணம் நமக்கே எதிராயிற்றே என்று இறந்தான்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil