திருக்குறள் அதிகாரம் 2 வான் சிறப்பு | Thirukkural Adhikaram 2

Thirukkural Adhikaram 2

திருக்குறள் அதிகாரம் 2 | வான் சிறப்பு | Thirukkural Adhikaram 2 in Tamil

திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறள் காலத்தால் அழியாமல் இன்னும் நிலைத்து நிலைக்கிறது. இதில் 1330 குறட்பாக்களும், 133 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரமும் மக்களுக்கு ஒவ்வொரு கருத்துக்களை எடுத்துரைக்கிறது. நாம் இந்த தொகுப்பில் திருக்குறளில் 2-வது அதிகாரமான வான் சிறப்பு குறளை காணலாம் வாங்க.

திருக்குறள் அதிகாரம் 2:

குறள்: 11

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

விளக்கம்: 
  • இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் வாழ மழை உதவுவதால், மழையானது அமிழ்தம் போன்றது.

குறள்: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

விளக்கம்: 
  • மழை உண்பவர்களுக்கு உணவு பொருட்களை விளைவித்து தருவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு அருந்தும் உணவாகவும் மழை இருக்கிறது.

வான்சிறப்பு –  Thirukkural Adhikaram 2

குறள்: 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

விளக்கம்: 
  • மழை பொழியாமல் போனால் கடலால் சூழ்ந்த இந்த பூமியில் உள்ள உயிரினங்கள் பசிப்பிணியால் வருந்தும்.

குறள்: 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

விளக்கம்:
  • மழையின் வரவு இல்லாமல் போனால் பயிர் செய்யும் உழவராலும் ஏர் கொண்டு உழ முடியாது.

குறள்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

விளக்கம்:
  • பொழியாமல் மக்களை வாட்டுவதும் மழை, வாடிய மக்களுக்கு மழையை பொழிய செய்து அவர்களின் வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையாகும்.

Thirukkural Adhikaram 2 in Tamil:

குறள்: 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

விளக்கம்:
  • வானிலிருந்து மழை பொழியாமல் போனால் பூமியில் பசும்புல்லை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

குறள்: 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

விளக்கம்:
  • கடல் நீர் ஆவியாகி மேகத்திற்கு சென்று மழை பொழியவில்லை என்றால் அப்பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.

வான் சிறப்பு திருக்குறள்:

குறள்: 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விளக்கம்:
  • மழை பெய்யாமல் போனால், உலகத்தில் கடவுளுக்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூஜையும் நடைபெறாது.

குறள்: 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

விளக்கம்:
  • இந்த உலகத்தில் மழை பெய்யாமல் போனால் மற்றவர்களுக்கு செய்யும் தானமும், தனக்காக செய்யும் தவமும் இல்லாமல் போய்விடும்.

குறள்: 20

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

விளக்கம்:
  • இந்த பூமியில் தண்ணீர் இல்லாமல் யாராலும் வாழ முடியாது. அப்படிப்பட்ட தண்ணீரை எவ்வளவு பெரிய செல்வந்தராலும் மழை பெய்யவில்லை என்றால் பெற முடியாது.
தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil