திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு | Thirumurugatrupadai Nool Kurippu in Tamil..!

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். நம் தமிழின் பெருமைகள் உலக நாடுகள் எல்லாவற்றிலும் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நூலில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நாம் இந்த பதிவில் திருமுருகாற்றுப்படை நூலின் குறிப்பையும், ஆசிரியர் பற்றிய வரலாற்றையும் பற்றி பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே திருமுருகாற்றுப்படை நூல் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ⇒ ஐந்திணை ஐம்பது மற்றும் ஐந்திணை எழுபது நூல்கள் 

திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு:

இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஓன்று. இந்த திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களில் முதலில் வைத்து பாடப்படுகிறது. இந்த நூல் கடைச்சங்க நூல்களில் ஓன்று என்றும் அதேபோல் இது பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்றும் கூறப்படுகிறது. இந்த நூல் ஒரு சங்ககால நூல் ஆகும். இந்நூல் தொகை நூல் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நூல் 317 அடிகளை கொண்ட ஆசிரியப்பாவில் ஆனது. இந்த நூல் பன்னிரு திருமுறை பகுப்பில் 11 ஆவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் மதுரையை சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இந்நூல் முருகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக  கொண்டு பாடப்பட்டுள்ளது.

இந்நூல் ஒரு புறப்பொருள் நூலாகும். திருமுருகாற்றுப்படை நூல் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள ஆறு பகுதிகளும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் பற்றியும் சிறப்பாக பாடப்பட்டுள்ளது.

  • முதல் பகுதி – திருப்பரங்குன்றம்
  • இரண்டாம் பகுதி – திருச்செந்தூர்
  • மூன்றாம் பகுதி – திருத்தணி
  • நான்காம் பகுதி – பழனி
  • ஐந்தாம் பகுதி – பழமுதிர் சோலை
  • ஆறாம் பகுதி – சுவாமிமலை

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பு

இதில் ஆற்றுதல் என்னும் சொல் வழிபடுதல் என்னும் பொருள் தருகிறது. இந்நூலில் முருகபெருமானின் அறுபடை வீடுகள் பற்றி முழுமையான செய்திகளை கூறுவதால் இது திருமுருகாற்றுப்படை என்னும் பெயர்பெற்றது. முருகு மற்றும் புலவராற்றுப்படை என்பன திருமுருகாற்றுப்படை நூலின் வேறு பெயர்கள் என்று கூறப்படுகின்றன.

திருமுருகாற்றுப்படை ஆசிரியர் குறிப்பு:

திருமுருகாற்றுப்படை நூலின் ஆசிரியர் நக்கீரர் என்னும் புலவர். இவர் மதுரையை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் கணக்காயர். இவர் மொத்தம் 37 பாடல்கள்  பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. இவருடைய காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.

இந்த திருமுருகாற்றுப்படை நூலை முதன் முதலில் 1834 ஆம் ஆண்டு சரவணப் பெருமாள் ஐயர் என்பவர் பாசுரமாக பதிப்பித்தார். 1889 ஆம் ஆண்டு உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பதிப்பான பத்துப்பாட்டு இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை நூல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நூலை வேறு சில புலவர்களும் வெளியிட்டனர்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement