பெட்ரோல் பம்ப்
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் 5 நபர்கள் இருக்கின்றார்கள் என்றால் 5 நபர்களிடமும் வண்டி இருக்கின்றது. நம் முன்னோர்கள் காலத்தில் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில் சென்றார்கள். ஆனால் இன்றைய காலம் அப்படியில்லை அதிகமாகவே வளர்ச்சி அடைந்து விட்டது. எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் வண்டி மற்றும் கார்களுக்கு பெட்ரோல் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. அதனால் பெட்ரோல் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
பெட்ரோல் போடும் போது கவனிக்க வேண்டியவை:
பெட்ரோல் பங்க் தேர்வு செய்வது எப்படி.?
முதலில் எந்த பெட்ரோல் பாங்கில் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த பெட்ரோல் பங்கை தேர்வு செய்வது நல்லது. ஏனென்றால் அது நம்பிக்கையான பெட்ரோல் பங்காக இருக்கும். ஆளே இல்லாத டீ கடையில டீ சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அது போல தான் ஆளே இல்லாத பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது தவிர்க்க வேண்டும்.
பெட்ரோல் தரத்தை பார்ப்பது எப்படி.?
பெட்ரோல் போடும் போது மீட்டரில் நிறைய விதமாக காமிக்கும். அதில் Density என்று காட்டும். அந்த Density பெட்ரோலின் தரத்தை குறிக்கும். பெட்ரோலை பொறுத்தவரை 710 முதல் 770 kg/ m3 இருக்கலாம். அதுவே டீசலாக இருந்தால் 820 முதல் 860 kg/m3 வரை இருக்கலாம்.பெட்ரோல் போடும் போது போன் பேசினால் அவ்ளோ தான்..!
பெட்ரோல் போடும் போது இதெல்லாம் கவனிங்க:
பெட்ரோல் போடும் போது மீட்டரில் எல்லா எண்களும் பூஜ்ஜியத்தில் இருக்கிறதா என்று அறிந்த பிறகு பெட்ரோல் போடவும். ஏனென்றால் பெட்ரோல் பம்ப் ரொம்ப நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் ஏர் பிஷர் ஏற்பட்டு பெட்ரோல் போடும் gun எடுத்தவுடன் மீட்டர் தன்னாலே ஓட ஆரம்பிக்கும். அதனால் பூஜ்ஜியத்தை கவனித்து போடுங்க.
எப்படி பெட்ரோல் சிறந்தது:
எப்படி பெட்ரோல் போடுவது என்றால் வண்டி அல்லது காரக வைத்திருந்தாலும் டேங்க் முழுவதுமாக போட வேண்டும். ரூபாய் கணக்கிலோ அல்லது லிட்டர் கணக்கிலோ போடாதீர்கள்.
பைக் வைத்திருப்பவர்கள் இனி பெட்ரோல் விலை பத்தி கவலைப்படாதீங்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |