TNPSC தமிழ் வினா விடை | TNPSC Question And Answer in Tamil
அனைவருக்குமே அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்து நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல பாட புத்தகங்களை படித்து தேர்வுக்கு தயாராகுவோம். அப்படி TNPSC தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவில் TNPSC தேர்வில் கேட்கப்படும் முக்கியமான கேள்வி பதில்களை பதிவிட்டுள்ளோம். அதை படித்து அனைவரும் பயன் பெறுங்கள். வாங்க TNPSC தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி மற்றும் பதில்களை பார்க்கலாம்.
TNPSC கேள்வி பதில்கள்:
- உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற கொள்கையை உயிர்மூச்சாய் பெற்றவர் யார்?
விடை: பாரதிதாசன்
2. தமிழகத்தின் வொர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: வாணிதாசன்
3. தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது யாரை?
விடை: தந்தை பெரியார்
4. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என பாடியவர் யார்?
விடை: திருமூலர்
5. தலைவனை குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
விடை: ஐ
TNPSC Question And Answer in Tamil:
6. அரசனை குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
விடை: கோ
7. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என கூறியவர் யார்?
விடை: திரு.வி.க
8. தழீஇ என்பதன் இலக்கணக் குறிப்பு
விடை: சொல்லிசை அளபெடை
9. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே இது யாருடைய பாராட்டுரை
விடை: பாரதிதாசன்
10. அகநாநூற்றில் மணிமிடை பவளம் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
விடை: 180
TNPSC Questions And Answers in Tamil:
11. நற்றிணையை தொகுப்பித்தவர் யார்?
விடை: பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
12. காந்தியடிகளால் தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: அஞ்சலை அம்மாள்
13. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரை கோயில்களில் பழமையானது எந்த ஊரில் உள்ளது?
விடை: பிள்ளையார்பட்டி
14. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற தொடரை எழுதியவர் யார்?
விடை: பாரதியார்
15. வனப்பு என்னும் சொல்லின் பொருள்
விடை: அழகு
TNPSC Question And Answer in Tamil:
16. சிந்தாமணி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: சீவகன்
17. முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் யார்?
விடை: பெயர் தெரியவில்லை
18. மதோன் மத்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: சிவபெருமான்
19. தேனில் ஊறிய செந்தமிழன் சுவை தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் யார்?
விடை: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
20. லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்ற நூலை தழுவி எழுதப்பட்ட தமிழ் பாடல் வடிவ நாடக நூல்?
விடை: மனோன்மணியம்
TNPSC Questions And Answers in Tamil:
21. பிரபந்தம் எனும் சொல் உணர்த்தும் பொருள் எது?
விடை: நன்கு கட்டப்பட்டது
22. துள்ளம் எனும் ஊரின் தற்பொழுது பெயர்
விடை: தண்டலம்
23. உ.வே.சா என் சரிதம் எனும் வரலாற்று நூலை எந்த இதழில் தொடராக எழுதினார்
விடை: ஆனந்த விகடன்
24. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்
விடை: இலத்தின்
25. இந்தியாவின் தேசிய பங்கு விகிதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: அண்ணல் அம்பேத்கர்
TNPSC Question And Answer in Tamil:
26. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் யார்?
விடை: ஒளவையார்
27. அடவி என்பதன் பொருள்
விடை: காடு
28. பிடி என்பதன் பொருள்
விடை: பெண் யானை
29. வீறு என்பதன் பொருள்
விடை: வலிமை
30. இமயம் எங்கள் காலடியில் எனும் கவிதை தொகுப்பு நூல் யாருடையது
விடை: ஆலந்தூர் மோகனரங்கன்
TNPSC Questions And Answers in Tamil:
31. என்றுமுள தென் தமிழ் என குறிப்பிடுபவர் யார்
விடை: கம்பர்
32. தேசியம் காத்த செம்மல் என முத்துராமலிங்க தேவரை பாராட்டுபவர் யார்?
விடை: திரு.வி.க
TNPSC பொது அறிவு | பிரித்து எழுதுக |
33. தழீஇய என்பது
விடை: சொல்லிசை அளபெடை
34. முத்தொள்ளாயிரம் இப்பாடலின் ஆசிரியர் யார்?
விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
35. பிரெஞ்சு குடியரசு தலைவரிடம் செவாலியர் என்ற விருதினை பெற்றவர் யார்?
விடை: வாணிதாசன்
TNPSC கேள்விகள்:
36. சாலை இளந்திரையனின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற நூல் எது?
விடை: புரட்சி முழக்கம்
37. ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை இயற்றியவர் யார்?
விடை: இராமலிங்கனார்
TNPSC General Knowledge Questions And Answers |
38. கம்பராமாயணத்தில் எத்தனை பாடலுக்கு ஒருமுறை கம்பர் சடையப்ப வள்ளலை வாழ்த்தி பாடியுள்ளார்
விடை: ஆயிரம்
39. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை: ஜி.யூ.போப்
40. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் யார்?
விடை: வீரமாமுனிவர்
TNPSC கேள்வி பதில்கள்:
41. அரை வயிற்று கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன் என்று கூறியவர்?
விடை: அம்பேத்கர்
42. தலைவர்களை உருவாக்குபவர் என்று சிறப்பித்து அழைக்கப்படுபவர் யார்?
விடை: காமராசர்
43. உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் என்றவர்
விடை: அம்பேத்கர்
44. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்
விடை:அம்புஜத்தம்மாள்
45. அம்மானை என்பது யாது?
விடை: பெண்கள் விளையாடும் விளையாட்டு
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |