மரங்கள் மற்றும் அதன் பயன்கள்..! Trees Uses In Tamil..!

Advertisement

மரங்களின் பெயர்கள் மற்றும் பயன்கள் | Trees Names In Tamil | Marathin Payangal

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பல வகையான மரங்களின் பெயர்களையும் மற்றும் மரத்தின் பயன்களையும்(Trees Uses) பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். வீட்டில் மரம் வளர்ப்பதினால் நிறைய இயற்கை நன்மைகள் அடங்கியுள்ளது. இப்போது இருக்கின்ற காலத்தில் மரங்கள் வளர்ப்பது எல்லாம் மிகவும் அரிதாக மாறிவிட்டது. இயற்கை இடம் எல்லாம் நிலங்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு மரத்திலும் ஏராளமான இயற்கை குணங்கள் நிரம்பியுள்ளது. சரி வாங்க இந்த பதிவில் மரங்களின் பெயர்களை மற்றும் அதன் பயன்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

மரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..! Tree names in tamil..!

மரங்களின் பயன்கள்..!

பனை மர பயன்கள் / Palm Tree Uses in Tamil:

Uses Of Trees In Tamil

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது நம் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. பனை மரத்தின் எண்ணெய் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு, முதுமை பெற்றவர்களுக்கு, மற்றும் மூளை சம்மந்த நோய்களுக்கு மிகவும் பயன்படுகிறது. மேலும் இந்த மரத்தின் எண்ணெய் புற்றுநோய் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புகளை அகற்றும் தன்மை கொண்டுள்ளது பனை மரத்தின் எண்ணெய்.

பைன் மர பயன்கள் / Pine Tree Uses in Tamil:

Trees Usesஇந்த மரத்தின் நட் பவுடர் மற்றும் மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் உணவு பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பைன் மரத்தில் உள்ள கொட்டைகள் RDA என்ற வைட்டமின் ஈ 60% சத்துக்கள் உள்ளது. இந்த பைன் மரம் தோல் மற்றும் சளி சவ்வுகள் போன்ற உடல் பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கும்.

பைன் மரத்தில் உள்ள ஒலிக் அமிலம் கொழுப்புப்புரதத்தைக் குறைக்க உதவுகின்றன. பைன் மரங்களில் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் நிறைந்துள்ளது.

பட்டர்நட் மர பயன்கள் / Butternut Tree Benefits:

Trees Usesவட அமெரிக்கா மக்களால் உற்பத்தி செய்யும் உண்ணக்கூடிய விதைகளுக்கு இந்த பட்டர்நெட் மரம் பயன்பட்டு வருகிறது. பித்தப்பை கோளாறுகள், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் மூல நோய்களுக்கு இந்த மரம் மிகவும் பயன்படுகிறது.

அடுத்து ஒட்டுண்ணிகள்(Parasites), பாக்டீரியாக்கள்(Bacteria), புற்றுநோய்(cancer), போன்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த மரம் பயன்படுகிறது.

அசோகா மர பயன்கள் / Ashoka Tree Uses:

Trees Uses

இந்த அசோகா மரத்தின் இலை மற்றும் பட்டைகளில் flavonoids, glycoside, saponins, tannins, esters, alkanes போன்ற பல ரசாயனங்கள் இருப்பதால் இந்த மரத்தின் பட்டை மருந்துகள் தயாரிப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பை இரத்த போக்கு, மூலநோய், இரத்த போக்கு போன்ற நோய்களுக்கும் இந்த மரம் மருந்தாக பயன்பட்டு வருகிறது.

இந்த மரத்தின் பூக்கள் புற்றுநோய்கள், நீரிழிவு, ரத்தக்கசிவு, கருப்பை கோளாறு பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.

தேக்கு மர பயன்கள் / Teak Trees Uses In Tamil:

Trees Uses

இந்த தேக்கு மரத்தில் பல்வேறு இடங்களில் கரிம சேர்மங்கள் அடங்கியுள்ளது. தேக்கு மரம் உடல் வீக்கங்களை நீக்கும் தன்மை வாய்ந்தது. இந்த தேக்கு மர இலைகளின் சாருவானது உடலில் இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது. தேக்கு விதைகளின் எண்ணெய் முடி வளரவும், அரிப்பு போன்ற பிரச்சனையை நீக்கும்.

இதனுடைய இலைகள் இரத்த போக்கு மற்றும் இரத்த நாளங்களை சுருங்க வைக்கின்றன. இந்த மரம்(importance of trees in tamil) உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. தேக்கு மரத்தின் பட்டையானது தலை வலிக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த மரத்தினால் எடுக்கப்பட்ட விதை எண்ணெய் உடலில் தோல் நோய்களுக்கும், முடி இல்லாமல் வழுக்கை உள்ளவர்களுக்கு இந்த விதை எண்ணெய் அதிகமாக பயன்பட்டு வருகிறது.

விழுதி மர பயன்கள் / Vizhuthi Tree Uses(Cadaba Fruitcosa):

விழுதி மரம்

விழுதி மரத்தை “விளச்சி” மரம் என்று அழைக்கின்றனர். அனைத்து மூலிகை மரத்தின் ஒன்றாகும் இந்த விழுதி மரம். இந்த மரத்தின் இலை, காய் மற்றும் வேர்கள் அதிகமாக மருத்துவ பலன்களை தருகிறது.

விழுதி மரம் வாதம், உடலில் ஏற்படும் கட்டிகள் போன்றவற்றை நீக்கும். விழுதி இலையை அரைத்து அதன் சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் நீங்கிவிடும்.

யூகலிப்டஸ் மர பயன்கள் / Eucalyptus Tree Uses:

Trees Uses

யூகலிப்டஸ் பசுமையான மரத்தை சேர்ந்ததாகும். இந்த மரம் அதிகமான மருத்துவ குணங்கள் வாய்ந்தது. யூகலிப்டஸ் உடலில் இருக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை வாய்ந்தது. குறிப்பாக ஆஸ்த்மா நோய் உள்ளவர்களுக்கு இந்த மரம் சிறந்த மருந்தாக விளங்குகிறது. யூகலிப்டஸ் இலையில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

யூகலிப்டஸ் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஆயில் இருமல், பற்களில் ஏற்படும் பிரச்சனை, காய்ச்சல் போன்றவைகளுக்கு நல்ல மருந்தாக திகழ்கிறது.

ஆப்பிள் மர பயன்கள் / Apple Tree Uses:

Trees Uses

ஆப்பிள் உலகெங்கும் வளர்க்கப்படும் பழ வகைகளில் ஒன்றாகும். ஆப்பிளில் அதிகமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் ஜுஸில் மாலிக் மற்றும் டார்டாரிக் அமிலம் நிறைந்துள்ளது. ஆப்பிளில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியுள்ளது.

முக்கியமாக தினமும் நாம் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் உடல் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும். அதோடு இரவில் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

ஆலமரம் பயன்கள் / Banyan Tree Uses:

Banyan Tree Uses

ஆலமரம் நமது நாட்டின் தேசிய மரமாகும். ஆலமரங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கிறது. ஆலமரத்தில் நிறைய நியூட்ரியன்ட்ஸ் நிறைந்துள்ளது. இந்த ஆலமரம் 21 மீ அளவிற்கு உயரத்தை கொண்டுள்ளது.

உயரத்தை சமப்படுத்தும் அளவிற்கு கிளைகளும் உடையது. இதனுடைய இலைகள் 10-20 செ.மீ நீளம் கொண்டவை. இந்த ஆலமரத்தின் இலைகள் இந்திய நாட்டில் தட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலமரத்தில் பாக்டீரியா, எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்திகள் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இதனுடைய இலை, விதைகள் மற்றும் பட்டை போன்றவை பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.

அரச மரம் பயன்கள் / Peepal Tree Uses: 

Peepal Trees Uses

இந்த அரச மரம் வேகமாக வளர்ந்து வரும் தன்மை உடையது. இந்த மரத்தின் சிறப்பு மனிதனின் இதய வடிவை போன்று அமைந்திருக்கும்.  அரச மரத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஃப்ளேவோவாய்ட்ஸ், அஸ்பார்டிக், டேனிக் அமிலம், வைட்டமின், கிளைசின் சத்துக்கள் உள்ளது.

இந்த அரச மரம் காதில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இதன் வேர் பட்டை புண்களை சுத்தம் செய்தல், ஈறு நோய்களைத் தடுப்பது, சிறுநீர் தொல்லைகள் என பல பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. அது மட்டும் இல்லாமல் அரச மரத்தில் காய்க்கக்கூடிய பழம் ஆஸ்த்மா மற்றும் பல நோய்களுக்கு சிறந்ததாக தோன்றுகிறது.

சால் மரத்தின் பயன்கள் / Sal Tree Uses:

Trees Uses

சால் மரம் ஒரு அறிய வகையான மரமாகும். இந்த சால் மரமானது 30 மீ உயரம் உடையதாக உள்ளது. களிம்புகளை தயாரிப்பதற்கு மூலப்பொருளாக இந்த மரம் பயன்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் சால் மரம் சருமத்திற்கு க்ளென்சர் தயாரிக்க உதவியாக இருக்கிறது.

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் மருந்துகள் மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்கிறது. இந்த மரம் பாதத்திற்கு  கிரீம் தயாரிக்க உதவியாக உள்ளது. இதன் விதைகள் பல் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. இந்த மரத்தால் ஆன கிரீம் வகைகளை தோல் சம்மந்த நோய்களுக்கு பயன்படுத்தலாம்.

அதுமட்டும் இல்லாமல் பழங்குடி மக்கள் இந்த சால் மரத்தின் இலைகளை கிண்ணங்கள், கூடைகள், தட்டுகள் போன்றவற்றை செய்ய பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இந்த சால் மரத்தின் விதையில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் தாராளமாய் உண்ணலாம்.

கருப்பு வில்லோ மரத்தின் பயன்கள் / Black Willow Tree Uses:

Trees Uses

Uses of trees in tamil: வில்லோ மரத்தின் இனத்தை சார்ந்தது கருப்பு வில்லோ மரம். இந்த மரத்தை “ஸ்வாம்ப் வில்லோ” என்று மற்றொரு பெயரால் அழைத்து வருகின்றனர். இந்த மரம் சருமத்தை எப்போதும் மென்மையாக வைத்திருக்கும். இதனுடைய நற்குணங்கள் உடலில் இருக்கும் இறந்த செல்களை குறைத்து, புதிய, மென்மையான மற்றும் மிருதுவான தோல் செல்களை வெளிப்படுத்துகிறது.

இந்த மரத்தில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. அதோடு சருமத்தில் இருக்கும் கோடுகள், சரும சுருக்கம் போன்றவற்றை குறைக்கிறது. இந்த கருப்பு வில்லோ மரத்தின் பயன்கள் சளி, இருமல், தலை வலி, பிரச்சனையை குணப்படுத்தும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement