UPI Id என்றால் என்ன? | What is UPI Id in Tamil
யுபிஐ என்றால் என்ன? வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் UPI என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். மொபைலில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இப்பொழுது அபரிவிதமாக உள்ளது என்று சொல்லலாம். உணவு, உடை என நமக்கு அன்றாட வாழ்வில் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் நாம் இப்பொழுது வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடிகிறது. வீட்டில் இருந்தே செய்ய கூடிய மிக முக்கியமான சேவைகளில் ஒன்று பணப்பரிமாற்றம். பணப்பரிமாற்றத்திற்கு உதவியாக இருக்கும் UPI பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
UPI Meaning in Tamil:
- முன்பு பண பரிமாற்றத்தை வங்கிக்கு சென்று செய்வோம், இப்பொழுது அந்த முறையை எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த UPI.
- Unified Payments Interface என்பதன் சுருக்கமே UPI ஆகும்.
UPI என்றால் என்ன:
- பணப்பரிவர்த்தனை செய்வதற்கு இது பயன்படுகிறது. இதை NPCI (National Payments Corporation of India) எனும் அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. NPCI இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு.
- முன்பு பணத்தை பரிமாற்றுவதற்கு IMPS, RTGS, NEFT பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பண பரிவர்த்தனையில் வங்கி open-ஆக இருக்கும் போது மட்டும் தான் பணத்தை transfer செய்ய முடியும். மேலும் பல ரூல்ஸ் இருந்தது.
பயன்கள்:
- UPI Meaning in Tamil: ஆனால் UPI-ல் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பணத்தை செலுத்த முடியும். UPI ஏற்கனவே உள்ள IMPS எனும் தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது. எந்த வித கட்டணமும் கிடையாது.
- இந்த செயலி மூலம் நீங்கள் பணத்தை அனுப்புவதற்கு ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வடிக்கையாளரின் முகவரி (பணம் பெறுபவரின் முகவரி) அதனை VPA என்று அழைப்பார்கள். VPA (Virtual Private Address) வங்கிக்கணக்கு எண் போல கடினமாக அல்லாமல் எளிதாக மின்னஞ்சல் முகவரி போன்று இருக்கும். (எ.கா) xyz@sbi போல் இருக்கும்.
- NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது. UPI குறியீடு 4-6 எண்களை கொண்டது. பண பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இது உபயோகப்படுகிறது.
- MPIN குறியீடு பணப்பரிமாற்றங்களுக்கான ஒரு கடவுச்சொல்லாகும்.
UPI பயன்படுத்த தேவையானவை:
- UPI Meaning in Tamil: இந்த UPI-ஐ பயன்படுத்துவதற்கு நீங்கள் அக்கௌன்ட் ஹோல்டர் ஆக இருக்க வேண்டும்.
- உங்களுடைய தொலைபேசி எண் வங்கி கணக்குடன் லிங்க் செய்திருக்க வேண்டும்.
- ATM Card/Debit Card/Credit Card வைத்திருக்க வேண்டும்.
- Google Pay (Gpay), PhonePe, Paytm, BHIM App மற்றும் பல ஆப்கள் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.