வருமான வரி கணக்கிடுவது எப்படி? – Varumana Vari Details in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் வருமான வரி கணக்கிடுவது எப்படி என்பதை பற்றி படித்தறியலாம். வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். ஆக ஒருவர் ஆண்டிற்கு 2.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டு வருமானமாக ரூ.2.50 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் எவரும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இருப்பினும், அத்தகைய நபர்கள் வருமான வரித் தொகையைத் திரும்பப் பெற விரும்பினால், வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய வேண்டும்.
அதாவது வருமானத்தில், பல்வேறு வரி அடுக்குகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த, வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நீங்கள் விலக்குகளைப் பெறலாம். இந்த பிரிவுகளில் சில அடங்கும் அவை பிரிவு 80C கீழ் (ரூ. 1.50 லட்சம் வரை வருமான விலக்கு பெறலாம்), பிரிவு 24-யின் கீழ் (ரூ. 2 லட்சம் வரை வருமான விலக்கு பெறலாம்), பிரிவு 80 EEA-யின் கீழ் (ரூ.1.50 லட்சம்வரை வருமான விலக்கு பெறலாம்). சரி வாங்க இந்த பதிவில் வருமான வரி கணக்கிடுவது எப்படி?, வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
வருமான வரி கணக்கிடுவது எப்படி? – Income Tax Calculator Explained in Tamil
ஸ்டேப்: 1
https://www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அவற்றில் Tax Services என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
ஸ்டேப்: 2
இப்பொழுது ஒரு பேஜ் திறக்கப்படும், அந்த பேஜை ஸ்கிரால் செய்து கீழே வாருங்கள். அவற்றில் Tax Calculator என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 3
பின் மற்றொரு பக்கம் திறக்கப்படும் அந்த பக்கத்தின் வலது புறத்தில் உள்ள TAX INFORMATION AND SERVICES என்பதை தேர்வு செய்யுங்கள். பின் அவற்றில் Tax Calculators என்பதில் இந்து ஆப்சன் இருக்கும். அவற்றில் தங்களுக்கு எந்த கால்குலேட்டர் தேவையோ அந்த கால்குலேட்டரை தேர்வு செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
INCOME AND TAX CALCULATOR என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அவற்றில் Assessment Year என்பதில் உங்கள் வரிகள் கணக்கிடப்பட வேண்டிய மதிப்பீட்டு ஆண்டைத் தேர்வு செய்யவும்.
ஸ்டேப்: 5
நீங்கள் பிரிவு 115BAC இன் கீழ் வரிவிதிப்பைத் தேர்வுசெய்தால் ‘ஆம்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் பொருள் உங்கள் வருமான வரி புதிய வரி முறையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
ஸ்டேப்: 6
பின் Male / Female / Senior Citizen என்ற ஆப்ஷன்கள் இருக்கும் அவற்றில் நீங்கள் எந்த பிரிவை சேர்த்தவர்கள் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 7
பிறகு Residential Status என்ற ஆப்ஷனில் உங்கள் குடியிருப்பு நிலையைத் தேர்ந்தெடுக்கவும்.
Income from salary (Income from Salary before Exemptions/ Deductions என்பதில் உங்கள் சம்பளத்திலிருந்து உங்கள் வருமானத்தைக் குறிப்பிடவும்.
அதன் பிறகு வீட்டுச் சொத்தின் வருமானம், பிற மூலங்களிலிருந்து வரும் வருமானம், மூலதன ஆதாயங்கள், வணிகம் அல்லது தொழிலின் லாபங்கள் மற்றும் லாபங்கள், விவசாய வருமானம் போன்ற பிற வருமானங்களின் விவரங்களை வழங்கவும்
ஸ்டேப்: 8
நீங்கள் இது போன்ற கூடுதல் விவரங்களை வழங்க வேண்டும்: மொத்த வரிப் பொறுப்பு ரிட்டன் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு தேதி உண்மையான ITR சமர்ப்பித்த தேதி/மதிப்பீடு முடிந்த தேதி நிவாரணம் தவிர நிவாரணம் u/s 87A TDS/TCS/MAT (AMT) கடன் பயன்படுத்தப்பட்ட வரி விவரங்கள் செலுத்திய
ஸ்டேப்: 9
உங்கள் வரியைப் பெற ‘கணக்கிடு’ என்பதைக் கிளிக் செய்யவும். குறிப்பு: புதிய வரி அடுக்குகளின் கீழ் உங்கள் வருமான வரிப் பொறுப்பை அறிய விரும்பினால், எந்த விலக்குகளும் இல்லாமல் உங்கள் சம்பளத்தை உள்ளிடுவதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. மேலும், உங்கள் வருமான வரி கணக்கீட்டிற்குப் பொருந்தாத புலங்களில் “0” ஐ உள்ளிடலாம்.
வருமான வரி ஆன்லைனில் தாக்கல் செய்ய என்ன தகவல் தேவை?
- PAN விவரங்கள்
- ஆதார் விவரங்கள்
- குடியிருப்பு முகவரி விவரங்கள்
- வங்கி கணக்கு விவரங்கள்
- வருமானச் சான்றுகள் (சம்பள விவரங்கள், முதலீடுகளின் வருமானம், வீட்டுச்
- சொத்திலிருந்து வருமானம்)
- வருமான வரியின் பல்வேறு பிரிவுகளின் கீழ்
- கோரப்படும் விலக்குகள்
- வரி செலுத்துதல் விவரங்கள்
வருமான வரி விகிதங்கள்:
வரி விதிக்கக்கூடிய வருமான அடுக்கு | தற்போதுள்ள விகிதம் | புதிய விகிதம் |
2.5 லட்சம் வரை | இல்லை | இல்லை |
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை | 5% | 5% |
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை | 20% | 10% |
ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை | 20% | 15% |
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை | 30% | 20% |
ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை | 30% | 25% |
ரூ 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் | 30% | 30% |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |