விடுகதை விளையாட்டு | Vidukathai in Tamil Comedy
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் வணக்கம்..! சிரித்து வயிறு வலிப்பது மட்டுமில்லாமல் யோசித்து சிந்திக்க வேண்டி இருக்கும். இப்போது இந்த பதிவில் என்ன பார்க்க போகிறோம் என்பதை எல்லாரும் யோசித்திருப்பீர்கள். இந்த பதிவில் நகைச்சுவை மட்டும் இல்லாமல் யோசித்து விடை தரும் வகையிலும் இருக்கும். வாங்க அந்த விடுகதைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
விடுகதை With Answer in Tamil:
1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
விடை: தேள்.
2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
விடை: தலைமுடி
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்? அவன் யார்?
விடை: வெங்காயம்
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான். அவன் யார்?
விடை: கரும்பு
5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
விடை: விழுது
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
விடை: பட்டாசு
7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
விடை: மூச்சு
8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
விடை: பூரி
9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
விடை: காகம்
10. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் ?
விடை: வெண்டைக்காய்
11. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
விடை: பட்டுத்துணி
12. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
விடை: பட்டாசு
13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
விடை: பற்கள்
14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
விடை: அகப்பை
15. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
விடை: சூரியன்
16. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
விடை: சோளக்கதிர்
17. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
விடை: உப்பு
18. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்து அல்ல அது என்ன?
விடை: கடல்
19. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
விடை: நிழல்
20. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
விடை: சைக்கிள்
21. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
விடை: முட்டை
22. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
விடை: சிரிப்பு
23. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
விடை: குடை
24. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
விடை: சிலந்தி வலை
25. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு?
விடை: கொசு
26. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
விடை: தொலைபேசி
27. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
விடை: நிலா
28. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
விடை: பெட்ரோல்
29. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
விடை: இதயம்
30. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?
விடை: பம்பரம்
31. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
விடை: முள்
32. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
விடை: பாம்பு
33. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?
விடை: சூரியன்
33. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
விடை: முருங்கைமரம்
34. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?
விடை: துவாரம்
35. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
விடை: தொட்டா சுருங்கிச் செடி
36. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?
விடை: கொடி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |