ரயில் பயணம்
நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கையில் நிறைய வகையான பயணங்களை மேற்கொண்டிருப்போம். ஆனால் அந்த பயணங்களில் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு பயணம் என்றால் அது ரயில் பயணமாக உள்ளது. ஏனென்றால் ரயில் பயணத்தினை அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி மகிழ்ச்சியாக அந்த தருணத்தை கழிக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் உடல் ரீதியாகவும் ரயில் பயணம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் சிறந்ததாக உள்ளது. இப்படி இருக்கும் ரயில் பயணத்தின் போது திடீரென்று நம்முடைய கை தவறி ஏதேனும் பொருட்கள் கீழே விழுந்தால் அவ்வளவு தான் நாம் திரும்ப எடுக்க முடியாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இனி நீங்கள் இவற்றை நினைத்து பயப்பட வேண்டாம். ஏனென்றால் ரயில் பயணத்தின் போது உங்களுடைய மொபைல் போன்ற வேறு ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் கை தவறி கீழே விழுந்தால் அதனை பெற்று கொள்ளலாம்.
ரயிலில் பயணம் செய்வது:
இன்றைய காலத்தை பொறுத்தவரை நாம் அனைவரும் எங்கு சென்றாலும் மொபைல் இல்லாமல் செல்வதே இல்லை. அதிலும் குறிப்பாக நாம் வெயிலில் எங்கயாவது செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் மொபைல் உடன் சார்ஜையும் சேர்த்து கொண்டு தான் எடுத்து செல்வோம்.
இதோடு மட்டும் இல்லாமல் கார், பஸ், பைக் மற்றும் ரயில் என அனைத்து இடங்களிலும் நம்முடைய மொபைலை பார்த்து கொண்டே தான் செல்வோம்.
அப்படி செல்லும் பட்சத்தில் நம்முடைய கை தவறி மொபைல் கீழே விழுந்து விட்டால் கார், பஸ் மற்றும் பைக் இவற்றில் செல்லும் போது கீழே இறங்கி எடுத்துகொள்ளலாம். ஆனால் ரயிலில் செல்லும் போது அப்படி எடுக்க முடியுமா..?
இதையும் படியுங்கள்⇒ இனி ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டாம்..! இந்த குட் நியூஸ் தெரியாதா உங்களுக்கு..
இனி நீங்கள் ரயிலில் செல்லும் போது ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் கீழே விழுந்தால் அதனை எடுக்க முடியும். அதற்கு முதலில் உங்களுடைய பொருள் எந்த இடத்தில் விழுந்ததோ அந்த இடத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பியின் எண்ணையும் நினைவில் வைத்து கொண்டு அதனை தொடர்ந்து 182 என்ற ரயில்வே போலீஸின் அவசர உதவி எண்ணை அழைத்து நடந்த அனைத்தினையும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் கூறும் போதே சில தகவல்கள் உங்களுக்கு மொபைல் மூலமாக ரயில்வே அதிகாரிகளால் தெரிவிக்கப்படும். இவற்றை எல்லாம் முடிந்த பிறகு உங்களுடைய பொருட்களை தேடுவதற்கான பணி தொடங்கப்படும். இதன் மூலம் உங்களுடைய பொருள் விரைவில் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
ஆனால் உங்களுடைய பொருள் விழுந்த இடத்தில் யாரேனும் அதனை பார்த்து எடுத்து சென்றால் அதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பு இல்லை என்றும் இந்த நடைமுறையானது 1,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் பொருள்களுக்கு மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ ரயில் பயணிகள் இனி நிம்மதியா தூங்கலாம்..! நியூஸ் வந்தாச்சு..
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |