எந்த வயதில் திருமணம் செய்தால் நல்லது..!

Advertisement

எந்த வயதில் திருமணம் செய்யலாம்..! Which Age Good For Marriage..! | What is The Correct Age to Get Married

What Age Difference Is Good For Marriage: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது என்ற தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். திருமணம் என்பது ஆண்/ பெண் இருவருக்கும் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். திருமணம் என்று பேச்சு எடுத்தாலே இயல்பாகவே அனைவரின் மனதில் பயம் எழும். திருமணத்தினை வேண்டாம் என்று பயத்தினால் கடத்தி கொண்டே இருப்பார்கள். இந்த பயம் வருவதன் காரணம் திருமணம் ஆகிவிட்டால் நமது சுதந்திரமானது பாழாகிவிடுமோ என்ற பயம் தான் இன்றும் பலரிடம் நிலவி வருகிறது. சரி வாங்க நண்பர்களே இப்போது எந்த வயதில் திருமணம் செய்தால் நல்லது என்ற முழு விவரத்தினை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

newஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா..! Same Rasi And Nakshatra Marriage In Tamil..!

திருமணத்தை தள்ளி போடுவதால் என்ன நிகழும்:

What Age Difference Is Good For Marriageதிருமண பேச்சு என்றாலே பலர் தள்ளி போடுவார்கள். இதன் பின் விளைவுகள் பலருக்கும் தெரிகிறது இல்லை. திருமணத்தினை கடத்தினால் தான் குடும்பத்தின் பாரத்தினை சுமப்பது போன்று இருக்கும் என்று கூறுகிறார்கள். 25 வயதிற்குள் திருமணம் ஆகாமல் அதற்கு மேல் மணம் முடிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.

28 – 30 வயதில் திருமணம் நடந்தால்:

திருமணமானது 28 வயது முதல் 30 வயதில் ஏற்பட்டால் உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விடும். அதனால் 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்று கொள்ளலாம் என்று நினைப்பது மிகவும் தவறான விஷயமாகும். இது போன்று நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் நிகழ வாய்ப்பு உள்ளது.

மகிழ்ச்சி நிலைக்காது:

அடுத்து மனைவி கணவருடன் சந்தோசமாக எங்கும் இருக்க முடியாது. முக்கியமாக குடும்பத்தினை நடத்துவதற்கு சரியாக எந்த திட்டமும் போட்டு செயல்படுத்த முடியாது.

திருமணம் செய்ய ஏற்ற வயது:

திருமணம் என்பது 25 வயதில் நடந்தால் கணவன் மற்றும் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றி, வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலை மேற்கொண்டு வாழ்வினை நல்ல நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று யோசித்து செயல்படுவார்கள். திருமணம் 25 வயதில் ஆனால் இருவருக்கும் புரிதல் சரியாக அமைந்து குடும்ப பக்குவம் அமையப்பெறும்.

அனுபவம் கிடைக்கும்:

மேலும் இரவில் கணவன் மனைவி வெளியில் சென்றுவிட்டு எந்த நேரத்திலும் வரலாம். நீங்கள் அப்போது திருமணமான புது தம்பதியர்களாக இருப்பதால் யாரும் எந்த வித தடைகளும் கூற முடியாது. அதோடு உங்களுடைய சந்தோஷத்திற்கு எந்த இடையூறுகளும் இருக்காது.

25 வயதில் திருமணம் நடந்தால் உங்களுக்கு 30 வயது ஆகும் போது வாழ்க்கையில் பொறுப்புணர்வு வரும். குடும்பத்தை எப்படி நடத்தினால் எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தையும் சந்தோசமாக இருக்க முடியும் என்று நன்கு புரிதல் கிடைக்கும்.

தம்பதிகள் தவறுகள் செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அதனை பற்றி விளக்கமாக கூறி தவறை எடுத்து கூறுவார்கள். இந்த அனுபவத்தினால் உங்களுடைய குழந்தைக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் சரி செய்வதற்கு இது நல்ல அனுபவமாக இருக்கிறது.

30 வயதில் திருமணம் செய்தால்:

30 வயதில் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் முதுமை காலத்தினை அடைந்து விடுவீர்கள். உங்கள் குழந்தை கல்லூரி பயில்கின்ற போது உங்களுக்கு 50 வயது ஆகி இருக்கும். இந்த வயதில் வெளியில் வேலைக்கு செல்வது என்பது மிகவும் கடினமான  விஷயமாகும். அதனால் திருமணம் முடிப்பதற்கு சரியான வயது 25 வயதே ஆகும்.

இந்த பதிவு அனைவருக்கும் பிடித்திருந்தால் மறக்காமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement