அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்

Advertisement

அப்பா சொத்து யாருக்கு சொந்தம்

சொத்து பற்றிய தகவலை தினந்தோறும் தெரிந்து வருகின்றோம். என்ன தான் கூட பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தாலும் சொத்து என்று வந்து விட்டால் எதிரிகள் தான். அந்த வகையில் அப்பா சொத்து மகனுக்கா, மகளுக்கா என்ற கேள்வி வரும். அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் அப்பா சொத்து யாருக்கும் சொந்தம் என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?

அப்பா சொத்து யாருக்கு சொந்தம்:

உங்களுடைய அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து என்றால் அதில் பங்கு கேட்கலாம். இல்லையென்றால் பூர்விக சொத்து, பரம்பரை சொத்து ஏதும் அப்பாவிடம் இருந்தால் அதனை கேட்கும் உரிமை இருக்கிறது.

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தாக இருந்தாலும் கூட பிள்ளைகள் பங்கு கேட்கலாம். ஆனால் அப்பா அனுமதி இருந்தால் மட்டுமே அந்த சொத்து பிள்ளைகளுக்கு வரும். உங்களுக்கு வாரிசுரிமையோடு சொத்தை கேட்கும் உரிமை இருந்தாலும், சொத்தின் உரிமையாளர் சம்மதம் ரொம்ப முக்கியமானது.

 அப்பாவின் சொத்தை அவரின் விருப்ப படி பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கலாம். இல்லயென்றால் வேற யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் அதை கேட்க பிள்ளைகளுக்கு உரிமையும் இல்லை, அதை  எதுவும் செய்ய முடியாது. அது முழுவதும் அப்பாவின் விருப்பம். ஒரு வேலை அப்பா எந்த வித உயில் எழுதாமல் மரணம் அடைந்து விட்டார் என்றால் பிள்ளைகளுக்கு சொத்து வந்து சேரும்.  
தொடர்புடைய பதிவுகள் 
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement