இன்றைய தினத்தில் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் பொதுநலம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.
Womens Day Speech: தமிழ்நாட்டில் மகளிர் என்றாலே சிறப்பு தான். அதுமட்டும் இல்லாமல் மகளிர் தினம் என்று கொண்டாடப்படும் அன்றைய நாள் பெண்களுக்கு மிக சிறப்பான நாள் என்றும் கூட சொல்லலாம். பெண்களுக்கு உடல் உறுதியும் மன உறுதியும் ஆண்களை விட ரொம்பவே அதிகமாய் இருக்கக்கூடிய ஒன்று.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாள் ஒரு பெண் இருக்கிறாள்..! |
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் |
சர்வதேச மகளிர் தின வரலாறு: பெண்களின் வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி, 15,000 பெண்கள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஒரு பேரணி அமைத்தனர் பெண்கள். இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று உணர்த்தியவர் கிளாரா ஜெட்கின் என்பவர். இந்த மாநாட்டில் 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இவை அடிப்டையாகவே பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது என்றே கூறலாம்.
பெண்கள்…! நாட்டின் கண்கள்…! என்பது பொன்மொழி. |
சர்வதேச மகளிரின் சிறப்புகள்:
மார்ச் 8 ஆம் தேதி மட்டும் கொண்டாடபட வேண்டியவர்கள் இல்லை பெண்கள். வருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இந்த தமிழ்நாட்டு பெண்கள். கல் உடைக்கும் தொழில்களில் இருந்து கணினி, விஞ்ஞானம், என்று பல துறைகளில் பெண்கள் சாதித்து கொண்டே போகிறார்கள். ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்காக போராடி வென்றுடுத்த நாள் என்றே சொல்லலாம். பெண்களில் சாதித்தவர்கள் பட்டியலில் சில பேரின் வரலாற்றை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
கல்பனா சாவ்லா: இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு முதலில் பயணித்தவர் நம் நாட்டின் சாதனை பெண் கல்பனா சாவ்லா.
கருணை உள்ளம் அன்னை தெரசா: இந்தியாவின் கொல்கத்தாவில் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையை நிறுவினார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஏழை குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள், அனாதை குழந்தைகள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், எல்லாவற்றிற்கும் மனம் வந்து உதவியவர் நம் புனித அன்னை தெரசா. இவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது.
இராணி இலட்சுமிபாய்(ஜான்சியின் மகாராணி): இந்திய நாட்டிற்க்காக நிறைய போராட்டங்களில் கஷ்டப்பட்டு போராடி வென்றவர் ஜான்சி ராணி. வெள்ளயர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை உருவாக்கியபோது இவர் ஜான்சி ராணி என்றே பெயர் வைத்தார். இவருடைய புகழ் தமிழ்நாட்டில் இன்றும் பரவி உள்ளது.
கிரண் பேடி: இவர் சூன் 9, 1949 ஆம் ஆண்டு பிறந்தவர். கிரண் பேடி இந்திய அரசியல்வாதியாகவும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாகவும் திகழ்ந்தவர். இவர் இந்திய காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் பெண் அதிகாரி என்று நாம் பெருமையாக சொல்லலாம். கிரண் பேடி எழுதிய ஆங்கில நூல்கள்:
நான் துணிந்தவள்
ஊழலை எதிர்த்து
தலைமையும் ஆளுமையும்
இந்திய காவல்துறை
பெண்களுக்கு அதிகாரம்
இது எப்பொழுதும் இயலும்
புரூம் குரூம்.
சானியா மிர்சா(டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை): இவர் நவம்பர் 15 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். தமிழ்நாட்டின் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை என்று புகழ்மிக்க பலரால் அழைக்கப்பட்டவர். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிசு சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என அழைக்கப்பட்டவர். பின் 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றவர். டென்னிஸ் போட்டிகளில் முதல் இடத்தை தவறாது பிடிக்கும் முதல் இந்திய பெண் சானியா மிர்சா.
மகளிர் தின கவிதைகள்:
மகளிர் தின வாழ்த்துக்கள்:
மகளிர் தின வாழ்த்து கவிதை:
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |