யாதும் ஊரே யாவரும் கேளிர் விளக்கம் | Yaathum Oore Yaavarum Kelir Meaning in Tamil | Yathum Oore Yavarum Kelir
வாசகர்கள் இஅனைவருக்கும் வணக்கம் முந்தையை பதிவில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு பொருள் விளக்கத்தினை படித்து தெரிந்துக்கொண்டிருப்பீர்கள். இந்த பதிவில் கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒற்றை வரி உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரில் கணியன் பூங்குன்றனாரும் ஒருவர். இவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் இவருக்கு கணியன் எனும் பெயர் வந்தது. கணியம் என்பது நாள் மற்றும் கிழமைகளை ஆராய்ச்சி செய்து பலன் கூறும் ஜோதிடம் ஆகும். சரி இந்த பதிவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு பொருள் (yaathum oore yaavarum kelir meaning in tamil) விளக்கத்தினை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
கணியன் பூங்குன்றனார் 192-ஆம் புறநானூற்று பாடல்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
Yaadhum Oore Yaavarum Kelir Padiyavar:
கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சிறப்புமிக்க வரி என்றே சொல்லலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற வரியினை மேடை பேச்சாளர்கள் பல அரசு நடத்தும் விழாக்களில் இந்த வாக்கியத்தினை பற்றி அழகாக சொற்பொழிவு நடத்துவார்கள். மேலும் இந்த வரி அரசு பேருந்துகளில் அரசு அலுவலகங்களில் போன்ற பல இடங்களில் இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியம் எழுதப்பட்டிருக்கும். அத்தகைய சிறப்புமிக்க கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம் வாங்க..!
யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார்.
“எவ்வூராயினும் அஃது எம் ஊரே; யாவராயினும் அவர் எம் உறவினரே” என்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூறு பாடல் வரிக்கு அழகான எடுத்துக்காட்டை கூறியவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மகிபாலன்பட்டியில் பிறந்த கணியன் பூங்குன்றனார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |