டெலிகிராமில் இருக்கும் இந்த மூன்று விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Telegram tricks 

ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்றவை போல டெலிகிராமையும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். டெலிகிராமில் மெசேஜ் மட்டும் தான் பண்ண முடியும் என்று நினைக்கின்றனர். அப்படியில்லை டெலிகிராமில் மெசஜ் மட்டுமில்லை பல ட்ரிக்ஸ் உள்ளது. இன்றைய பதிவில் மூன்று விதமான ட்ரிக்ஸை பற்றி தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Trick -1

முதல் ட்ரிக் எதற்கென்றால் உங்கள் மொபைலில் உள்ள போட்டோ அழகாக இருக்கும். ஆனால் அந்த போட்டோவின் Background நல்லா இருக்காது. Background -யை Remove செய்வதற்காக எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.  டெலெக்ராமில் அந்த ஆப்ஷன் உள்ளது.

telegram tips

இதற்கு Telegram -க்கு செல்லவும். அதில் Search Bar -யில் AI Background Remover என்பதை Search செய்யவும். பின் அதில் Start என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் எந்த போட்டோவை Background இல்லாமல் வைக்க வேண்டுமோ அதை Send செய்ய வேண்டும். Send செய்தவுடன் Wait On It என்று வரும். அதன் பிறகு Background இல்லாமலே போட்டோ வந்துவிடும்.

Trick -2

நீங்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் அமேசானில் பார்க்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் பார்த்த போது அந்த பொருளின் விலை அதிகமாக இருக்கிறது. அதனால் விலை குறையட்டும் பின் வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் எப்போது குறையும் என்று தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி நீங்கள் அமேசானுக்கு செல்ல தேவையில்லை. அதற்கு டெலிகிராமில் வழி இருக்கிறது.

Telegram tricks 

டெலிகிராமில் Search Bar -யில் Amazon Price Traker என்று Search செய்யவும். அதில் நீங்கள் எந்த Product -யை வாங்க வேண்டுமோ அந்த Link -யை மட்டும் அதில் பேஸ்ட் செய்திடுங்கள்.

அதன் பிறகு அந்த Product -யின் விலை குறையும் போது அதுவே தெரிவிக்கும்.

Trick -3

உங்களிடம் உள்ள போட்டோ ஏதவாது ஒன்றை JPEG ஆக இருக்கிறது, அதை PNG ஆக டெலக்ராமில் மாற்றலாம்.

Telegram tricks 

அதற்கு டெலிகிராமில் Search Bar-யில் Image Converter என்று டைப் செய்யவும். அதன் பிறகு எந்த போட்டோவை எப்படி  மாற்ற வேண்டுமோ அந்த போட்டோவை SEND செய்யவும். பிறகு அதில் எந்த Format -யில் வேண்டும் என்று கேட்கும். அதை கொடுத்தால் போட்டோ வந்துவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ டெலிகிராமில் இவ்வளவு நாளாக யூஸ் பண்ணுறோம் இது தெரியாமல் இருந்திருக்கும் பாருங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement