BSNL-யின் இந்த மாத அதிரடி ஆஃபர் என்ன தெரியுமா?

Advertisement

BSNL offers tamilnadu :

நேற்று பிராட்பேண்ட் திட்டங்களில் உள்ள டேட்டா நன்மை மற்றும் விலைப்பற்றிய சலுகையை BSNL நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி BSNL நிறுவனத்தின் சில பிரீப்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக டேட்டா நன்மையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

மேலும் இப்போது BSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகையை செப்டம்பர் 16-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 16-ம் தேதிக்கு பின்பு 60 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளது.

BSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பல்வேறு பண்டிகையை முன்னிட்டு BSNL நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

என்னென்ன திட்டங்களில் தெரியுமா ?

BSNL  அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 திட்டங்களில் வழங்கப்படுகிறது.

பின்பு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.448 திட்டங்களில் கூட இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.

பிராட்பேண்டு சேவையின் கட்டண விவரங்கள்:

BSNL நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேண்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது.

குறிப்பாக இந்த திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BSNL அறிவித்துள்ள பிராட்பேன்ட் சேவை ரூ.777 திட்டம் பொறுத்தவரை 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் ரூ.1277 திட்டத்தில் பயனர்களுக்கு 750ஜிபி டேட்டா 10எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement