டிரைவிங் லைசென்ஸ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Driving Licence Online in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். பெரும்பாலான மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் Driving School-ல் வாங்குவது சுலபம் என்று தான் தெரியும் ஆனால் மிகவும் சுலபமான முறையில் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் மூலம் அப்ளை செய்து பெற முடியும். வாகன ஓட்டிகள் ஆர்டிஓ ஆபீஸ் செல்லாமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டிரைவிங் லைசன்ஸ் எவ்வாறு பெறலாம் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது ஒன்று LLR மற்றொன்று Driving Test. முதலில் LLR அப்ளை செய்து பின்னர் 3 மாதத்திற்கு பிறகு Driving Test முடிந்தவுடன் உங்களுக்கான டிரைவிங் லைசன்ஸ் கிடைக்கும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
- Age Proof இதற்கு நீங்கள் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- Address Proof இதற்கு ஆதார் கார்டு அல்லது ஒட்டர் ஐடி உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
- Self Declaration (Form 1)
- விண்ணப்பக் கட்டணம் இரு சக்கர வாகனத்திற்கு 230, நான்கு சக்கர வாகனத்திற்கு 380 வரை செலுத்த வேண்டும்.
Driving Licence Apply Online in Tamil:
இணையதளத்தில் https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். பின் அவற்றில் Online Services என்பதில் Driving License Related Services என்பதை கிளிக் செய்யவும். பின் அவற்றில் உங்களுடைய மாவட்டத்தை செலக்ட் செய்தவுடன் அடுத்த பேஜ் ஓபன் ஆகும்.
அதில் Apply for Driving Licence என்பதை கிளிக் செய்யவும்.
How to Apply Driving Licence Online in Tamil:
- அதில் 7 ஸ்டேப் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Continue என்பதை கிளிக் செய்யவும்.
How to Apply Driving Licence Online in Tamilnadu:
- பின் அதில் Holding Learner’s Licence என்பதை செலக்ட் செய்து விட்டு Learner’s Licence Number என்ற இடத்தில் உங்களுக்கான எண் உள்ளீட்டு OK என்பதை கிளிக் செய்யவும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
- பின் அதில் உங்களுக்கு ஒரு Notification வரும். அதில் OK என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்த பேஜ் ஓபன் ஆகும். அதில் நீங்கள் LLR கொடுத்த விவரங்கள் இருக்கும் அதனை சரி பார்த்து விட்டு Next என்பதை கிளிக் செய்தால் அடுத்த பக்கம் திறக்கப்படும். அதில் உங்களுடைய Application Details இருக்கும் அதை சரிபார்த்து கொள்ளவும்.
வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி? |
Driving Licence Apply Online in Tamil:
- பின் Scroll செய்யவும். அதில் கீழே Pay Now கொடுக்கவும். இதை கொடுத்தவுடன் இரண்டு தடவை Confirmation கேட்கும்.
- அதில் Confirm என்பதை கிளிக் செய்து உங்களின் Card Details கொடுத்து உங்களின் கட்டணத்தை செலுத்தவும்.
Driving Licence Apply Online in Tamil:
- பின் அதில் அடுத்த பேஜ் ஓபன் ஆகும் அதில் Click Here to Print Receipt-ஐ க்ளிக் செய்து கொள்ளவும். அதில் உள்ள Captcha Code -ஐ பூர்த்தி செய்து விட்டு Print Receipt-ஐ கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது Application Details மற்றும் Fee Payment முடிந்து விடும்.
- நீங்கள் RTO டெஸ்ட் செல்லும் போது Payment Receipt, pre Filled application, Acknowledgement Receipt போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். உங்களுடைய Driving டெஸ்ட் முடிந்து 2 நாட்களில் உங்களுக்கான டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும்.
டிரைவிங் லைசென்ஸ் சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |