Driving Licence Ekyc Method in Tamil
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதார் கார்டின் சேவை இப்போது மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தி கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆதார் இருந்தால் போதும் எந்த விதமான சேவைகளையும் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே இப்போதெல்லாம் பெற்று கொள்ள முடிகிறது. அந்த வகையில் இப்போது இணையதளம் வாயிலாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் Contactless Service மூலம் வாகனங்கள் தொடர்பான சேவைகளை ஆன்லைனில் செய்து கொள்ளும் வசதி ஒன்றை முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். வாங்க அது என்ன வசதி என்பதையும் எப்படி இணையதளம் வாயிலாக அப்ளை செய்யலாம் என்றும் தெரிந்து கொள்வோம்.
How to Apply Driving Licence Using Aadhar Card Online Apply in Tamil:
- பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு சிறப்பான சேவையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆதார் அட்டையை பயன்படுத்தி பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் போன்றவற்றை ஆன்லைன் மூலம் செய்து கொள்ள முடியும்.
- வாடிக்கையாளர்கள் வாகனங்கள் தொடர்பான பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெற முடியும். இந்த புதிய வசதியின் படி ஆர்.டி.ஓ. அலுவலகம் தொடர்பான 18 வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெறமுடியும். இதில் முக்கியமான சேவை என்னவென்றால் டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு நேரடியாக RTO ஆபீஸ் செல்லாமல் ஆதார் இருந்தால் ஆன்லைன் மூலம் வாங்கிவிடலாம்.
Driving Licence Ekyc Method in Tamil:
- https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அவற்றில் உங்களுடைய மாநிலத்தை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதில் Contactless Licence Services என்ற ஒரு திரை தோன்றும்.
- அதில் Issue of Learners license என்பதில் நீங்கள் லைசன்ஸ் அப்ளை செய்து கொள்ளலாம். Renewal Of dl என்பதில் உங்களது டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்து கொள்ளலாம். Change of Address in DL என்பதில் டிரைவிங் லைசன்ஸில் உள்ள உங்களின் முகவரியை மாற்றி கொள்ள முடியும்.
Driving Licence Apply Online E Kyc Method in Tamil:
- இந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் முக்கியம். மேலும் ஆதார் கார்டில் உள்ளது போலவே முகவரி டிரைவிங் லைசன்ஸில் இருக்க வேண்டும். ஆதார் கார்டில் மாற்றம் இருந்தால் இந்த சேவையை நீங்கள் ஆன்லைன் மூலம் பெற முடியாது.
- ஆதார் கார்டை Update செய்து விட்டு நீங்கள் Contactless Licence Services சேவையை தொடரலாம். ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |