ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

how to check ration shop open or closed in tamil

ஆன்லைன்  மூலம் ரேஷன் கடை திறந்துள்ளதா என்று எப்படி தெரிந்துகொள்வது?

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ரேஷன் கடை திறந்துள்ளதா என்று எப்படி ஆன்லைன் மூலம் பார்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம். அந்த காலத்தில் ரேஷன் கடை திறப்பதற்கு முன்பே முன்னதாக சென்று இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த  நிலைமையில்லை. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வேலைக்கு செல்வதால் ரேஷனில் பொருள்கள் வாங்குவதற்கு கூட நேரமில்லாமல் போகிவிட்டது. ஆன்லைனில் ரீசார்ஜ் கட்டணம், மின்சார கட்டணம், சொத்துவரி கட்டணம் என பலவகை கட்டணங்களை ஆன்லைன் மூலம் சுலபமாக கட்டுவதற்கு வசதிகள் வளர்ந்து விட்டது. ஆனால் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு அப்படி ஏதும் செய்யமுடியாது. ஆனால்  இப்போது அந்த வசதி வந்துள்ளது. ரேஷன் கடை எப்போ திறந்துள்ளது என்பதை online மூலம் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..

ரேஷன் அட்டை வகைகள் அதன் குறியீடு

உங்கள் ஊரில் ரேஷன் கடை ஆன்லைன் மூலம்  திறந்திருக்கிறதா என்று பார்ப்பது எப்படி?

உணவு பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு  துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளம் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட போது  விநியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடை எப்போது திறந்துள்ளது என்று பார்க்கலாம்.

ஸ்டேப்:1

உங்கள் ஊரில் இன்று ரேஷன் கடை திறந்துள்ளதா என்று பார்ப்பதற்கு https://www.tnpds.gov.in/ என்ற  இணையதளத்தில்  Search செய்து பார்க்கவும்.

ஸ்டேப்:2

வலைத்தளத்திற்கு சென்ற பிறகு  பொது விநியோக திட்ட அறிக்கையை  Click செய்யவும்.

ஸ்டேப்:3

அதன் பிறகு பொது விநியோக திட்ட Open  ஆனதும்  நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தேர்வு செய்து கொள்ளவும். அதன் பிறகு உங்கள் ஊர் ரேஷன் கடையின் விவரங்கள் இணையதளத்தில் வந்துவிடும்.

ஸ்டேப்:4

உங்கள் ஊர் ரேஷன் கடை திறந்துள்ளதா, திறக்கவில்லையா என்பதை அதில் தெரிந்து கொள்ளலாம். கடை திறந்துள்ளது என்றால் ஆன்லைன் என்று பச்சை நிறத்தில் இருக்கும். கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் என்று சிவப்பு நிறத்தில் காணப்படும்.

பொருட்களின் விவரம்:

ரேஷன் கடையில்  என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்றும் பொது விநியோக திட்டத்தின் மூலம் காணலாம். அதற்கு பொருட்கள் இருப்பு நிலையை Click செய்து உங்க ஊர்  ரேஷன் கடையில்  இன்று என்னென்ன பொருட்கள் தருகிறார்கள் என்று அதற்கு தகுந்தது போல் எப்போது பொருட்களை வாங்கலாம் என்று முடிவு செய்யலாம்.

புகார் விவரம்:

உங்கள் ஊர் ரேஷன் கடையில் ஏதேனும் தவறான செயல்பாடுகள் இருந்தால் புகார் செய்வதற்கும் இதில் வசதிகள் இருக்கிறது. அதற்கு புகார் என்பதை Click செய்யவும். மேலும் புகார் பற்றிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா என்றும் இதில் தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் ரேஷன் கார்டில்  பெயர்கள் சேர்ப்பது, மொபைல் எண்களை ரேஷன் அட்டையில் இணைப்பது, ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது.

அதிகாரப்பூர்வமான இணையதளம் 👉 https://www.tnpds.gov.in/

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil