நிறைய Photos-ஐ ஒரே PDF File-யில் கன்வெர்ட் செய்வது எப்படி?

Advertisement

நிறைய Photos-ஐ ஒரே PDF File-யில் கன்வெர்ட் செய்வது எப்படி? How to Convert Image to PDF in Windows in Tamil

நண்பர்களே வணக்கம்.. இன்றைய உலகம் செல்பி உலகமாகிற்றே.. ஆக நாம் எங்கு சென்று வந்தாலும் அவற்றின் ஞாபகர்த்தமாக ஒரு புகைப்படத்தை கண்டிப்பா எடுத்துக்கொண்டு தான் வருவோம். அப்படி எடுத்து புகைப்படங்களை நாம் நமது கம்ப்யூட்டரில் வைத்திருப்போம் அல்லது மொபைலில் வைத்திருப்போம். அந்த புகைப்படங்களில் சில நமக்கு முக்கியமான புகைப்படமாகவும் இருக்கும். அதனை தனியாக ஒரு PDF பார்மெட்டில் கன்வெர்ட் செய்து பத்திரமாக வைத்துக்கொள்ள விரும்புவோம் அல்லது மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் அதனை PDF பார்மெட்டில் மாற்றி அனுப்ப நினைப்போம். இருந்தலும் Images-ஐ PDF பார்மெட்டில் கன்வெர்ட் செய்வது எப்படி என்று அனைவருமே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில் இன்று நாம் நமது Windows-யில் உள்ள Images-ஐ PDF பார்மெட்டில் எப்படி கன்வெர்ட் செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நிறைய Photos-ஐ ஒரே PDF File-யில் கன்வெர்ட் செய்வது எப்படி?

How to Convert Image to PDF in Windows

முதலில் உங்கள் Windows-ஐ Open செய்துகொள்ளுங்கள் அதில் நீங்கள் Image வைத்திருக்கும் Folder-ஐ Open செய்து உங்களுக்கு தேவைப்படும் அனைத்து Images-ம் Select செய்துகொள்ளுங்கள்.

பிறகு Right Click செய்து Print என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பிறகு Microsoft Print to PDF என்பதை கிளிக் செய்யுங்கள்.

பின்பு நீங்கள் எந்த லொகேஷனில் சேவ் செய்ய விரும்புகிறீர்களோ அந்த லொகேஷனில் சேவ் செய்துகொள்ளலாம். இப்பொழுது அனைத்து Images-ம் PDF பார்மெட்டில் கன்வெர்ட் ஆகியிருக்கும். கண்டிப்பாக இந்த ட்ரிக்ஸை ட்ரை செய்து பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Play store -ல் இந்த settigns-யை மாற்றினால் நல்லது.!
உங்க ஸ்மார்ட் போனில் இந்த Settings பற்றி தெரிஞ்சி வச்சிக்கோங்க..! அதான் நல்லது

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement