How To Link Aadhaar With Electricity Bill in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள். இன்று நாம் இந்த பதிவின் மூலம் மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி |
மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காரணம் என்ன..?
நம் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவசமாக மின்சாரம் அல்லது மானிய விலை மின்சாரம் பெறுவதற்கு அரசாங்கம் மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீட்டை வாடகைக்கு விடும் போது ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு பெற்று குறைவான மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை சரி செய்யும் நோக்கத்தில் தான் மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி..?
- மின்சார வாரியத்தின் இணையதளத்தில் மின் நுகர்வு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இணைப்பு வழங்கப்படும்.
- அந்த இணைப்பில் மின் நுகர்வு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- பின் நீங்கள் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு கடவுச்சொல் Password வரும்.
- அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
அதேபோல, மின் வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போதும் மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
ஆதார் எண் இல்லாதவர்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த நகலை வைத்து நகலுடன், வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்தை கொண்டு மின் நுகர்வு எண்ணை இணைக்க முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |