வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை சுலபமாக எப்படி இணைப்பது என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். ஆதார் எண்ணை இணைப்பதற்காக தேவையில்லாத அலைச்சல் வேண்டாம் மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அவற்றை இணைப்பதற்கு ஒரு பொருள் மட்டும் இருந்தாலே போதும், பெரும்பாலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் போன் தான். நாம் வைத்திருக்கும் மொபைல் போன் மூலம் எப்படி இணைப்பது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி..? |
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்?
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் இந்தியா முழுவதும் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இவற்றை இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இவை எதற்காக இணைக்கப்பட்டு வருகிறது என்றால் நாடு முழுவதும் பெரும்பாலும் வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பங்கள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து அனைவருக்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கப்படுகிறது.
மேலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு மற்றொரு நோக்கங்கள் என்னவென்றால் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இருப்பார்கள் இது போன்ற காரணங்களினாலும் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்திருப்பார்கள் இது போன்ற தவறுகளை தடுப்பதற்காகவும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையில் இணைக்கிறார்கள்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு உங்களுடைய மொபைலில் ஒரே ஒரு ஆப் மட்டும் பதிவிறக்கம் செய்யவேண்டும். ஆதார் அட்டையை வைத்து நீங்கள் எந்த விதமான பணிகளில் ஈடுபட்டாலும் முதலில் ஆதார் கார்டில் உங்களுடைய தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அவற்றை எப்படி சுலபமாக இணைப்பது என்று வரிசை படி பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப்:1
முதலில் உங்களுடைய மொபைலை எடுத்துக்கொண்டு அதில் Google Play Store App அல்லது Google Chrome App போன்ற ஆப் மூலம் Voter Helpline என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
ஸ்டேப்:2
Voter Helpline பதிவிறக்கம் செய்த பிறகு அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த ஆப்பை Open செய்ய வேண்டும். Open செய்ததும் I Agree என்ற ஆப்ஷனை Click செய்யவும்.
ஸ்டேப்:3
அதன் பிறகு அதில் மொழி விருப்பத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த பக்கத்தில் உள்ள Explore என்ற தேர்வை Click செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் Electoral Authentication form என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டேப்:4
அதில் உங்களுடைய மொபைல் எண்ணை டயல் செய்யவும். அதன் பிறகு அதில் இருந்து OTP அனுப்பப்படும். அந்த OTP வந்ததும் அதை சரிபார்த்து கொண்டு Verification என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்:5
அதன் பிறகு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்ற விருப்பத்தை கிளிக் செய்து அதில் தொடர்ந்து உங்களுடைய வாக்காளர் அட்டையில் இருக்கும் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்து கொண்டு, Fetch Details என்பதை Click செய்து கொண்டு Proceed என்ற விருப்பத்தை Click செய்ய வேண்டும்.
ஸ்டேப்:6
அடுத்ததாக நீங்கள் பூர்த்தி செய்த விருப்பங்களை ஒரு முறை நன்றாக சரிபார்த்து கொண்டு Next என்பதை Click செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண், மொபைல் எண், இடம் போன்றவற்றை பதிவிட்ட பிறகு Done என்பதை Click செய்ய வேண்டும்.
ஸ்டேப்:7
Done செய்த பிறகு 6B என்ற ஒரு படிவம் ஓபன் ஆகும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை மறுபடியும் சரிப்பார்த்து Confirm என்ற விருப்பத்தை Click செய்யவேண்டும். இப்பொழுது உங்களுடைய ஆதார் எண் ஓட்டர் ஐடியில் இணைந்துவிட்டது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில்நுட்ப செய்திகள் |