காணாமல் போன PAN Card -யை திரும்ப பெறுவது எப்படி..?

How To Recover Lost Pan Card Online in Tamil

How to Recover Lost Pan Card Online in Tamil

இக்காலத்தில் PAN கார்டு மிகவும் அவசியமான ஒன்று. PAN என்பதன் விரிவாக்கம் Permanent Account Number ஆகும். ஒருவரின் முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் ஆகியவற்றை வருமான வரியுடன் ஒப்பிடுவதற்கு பான் கார்டு பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கியில் கணக்கு தொடங்குவது, பணம் செலுத்துவது, அசையா சொத்துக்களை வாங்குவது போன்றவற்றிற்கும் பான் கார்டு பயன்படுகிறது. அப்படி அனைத்திற்கும் மிகவும் முக்கியமாக இருக்கும் பான் கார்டை தொலைந்து விட்டால் என்ன செய்வது.? பான் கார்டு காணாமல் போனால் மீண்டும் வேறொரு பான் கார்டு வாங்க தேவையில்லை. ஆமாங்க காணாமல் போன பான் கார்டை அதே பான் கார்டு நம்பரில் மீண்டும் பெற முடியும். எனவே இப்பதிவில் காணாமல் போன PAN கார்டை போன் மூலம் மீண்டும் திரும்ப பெறுவது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தொலைந்த பான் கார்டு பெறுவது எப்படி.?

How To Recover Lost Pan Card Online in Tamil

ஸ்டேப்: 1

முதலில் ஸ்மார்ட் போனில் Chrome -மிற்கு சென்று www.onlineservices.nsdl என்று டைப் செய்ய வேண்டும்.

தொலைந்த பான் கார்டு பெறுவது எப்படி

ஸ்டேப்: 2

டைப் செய்து என்டர் கொடுத்தால் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அந்த பேஜில் Request For Reprint of PAN Card என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் ஒரு பேஜ் ஓபன் ஆகும்.

தொலைந்த பான் கார்டு பெறுவது எப்படி

ஸ்டேப்: 3

அந்த பேஜில் கீழ் பக்கத்தில் Scroll செய்து வந்தீர்கள் என்றால் ஒரு பேஜ் இருக்கும் அதில் நீங்கள் PAN CARD நம்பர், ஆதார் கார்டு நம்பர் மற்றும் பிறந்த மாதம், வருடம் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

 how to apply for lost pan card in tamil

ஸ்டேப்: 4

 how to apply for lost pan card in tamil

மேலும் GST நம்பர் இருக்கும். இது Optional தான். இதை நீங்கள் நிரப்பலாம் நிரப்பாமலும் இருக்கலாம். பிறகு அதன் கீழே, ஒரு பாக்ஸ் இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு அந்த பேஜில் ஒரு Captcha Code இருக்கும். அதை பிழையில்லாமல் Captcha பாஃக்சில் டைப் செய்து Submit கொடுக்க வேண்டும்.

How To Recover Lost Pan Card Online in Tamil

ஸ்டேப்: 5

Submit கொடுத்ததும், ஆதார் நம்பரை இணைத்துள்ள போனிற்கு OTP ஒன்று வரும். இந்த OTP-யை தவறில்லாமல் டைப் செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு PAN CARD, அட்டை வடிவத்தில் வேண்டுமா.? அல்லது EPAN CARD வேண்டுமா.? என்று கேட்கும். அதில் உங்களுக்கு தேவையானவற்றை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 6

How To Recover Lost Pan Card Online in Tamil

பான் கார்டு அப்ளை செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் அளிக்க வேண்டும். இதை ஆன்லைன் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். எனவே அந்த பேஜில் Payment ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

ஸ்டேப்: 7

பிறகு Apply ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து உங்கள் முகவரிக்கு தபால் மூலம் பான் கார்டு வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் உங்கள் போனிற்கும் பான் கார்டு பதிவிறக்கம் செய்வதற்கு ஒரு லிங்க் அனுப்பி வைப்பார்கள்.

மேலும் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு P ayment கட்டணம் 954 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள்
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம் 
எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்
போன் ஓபன் பண்ணாமலே யார் மெசேஜ் பண்ணிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil