இந்த 5 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க! உங்க Smart Phone சூடாவதை தடுக்க..!

How to stop Smartphone overheating in tamil

How to stop Smartphone overheating in tamil

இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைவியாருமே அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக ஸ்மார்ட்போனின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான செயல்திறன் மற்றும் பயன்பாடு காரணமாக, வெயில் காலத்தில் மொபைல்போன் அதிகளவில் சூடாக வாய்ப்புள்ளது.

அதிகப்படியான சூடு காரணமாக, செல்போனின் உள் பாகங்கள் பாதிக்கப்படலாம். இது செயல்திறன் இழப்பு, தரவு இழப்பு அல்லது பேட்டரி கசிவு போன்ற பல பிரச்சனைகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தலாம். ஆகவே உங்கள் ஸ்மார்ட்போன் சூடாகுவதை தடுத்திட 5 டிப்ஸை இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

சார்ஜிங்:

உங்கள் மொபைலை எப்போதுமே 100% விழுக்காடு பேட்டரியுடன் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே போதுமானது தான். சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே போனை விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கமாக உள்ளது. இப்படி தேவையில்லாமல் சார்ஜ் செய்வதும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆயுளுக்கும் நல்லது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Connectivity:

தேவை இல்லாத நேரங்களில் இருக்கும் இடத்தைக் குறிக்கக் கூடிய செயலியை disable செய்தல் அவசியம். அவை நாம் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டே இருப்பதால் மொபைல் சூடாகிறது. WI-FI, BLUE TOOTH, MOBILE DATA, facebook, twitter இவற்றையும் பயன்படுத்தாத நேரங்களில் disable செய்தல் அவசியம்.

செயலிகள் (Apps)

அதிக செயல்திறன் கொண்ட செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவை இல்லாத நேரங்களில் Backgroundல் இயங்கக் கூடிய Appsகளை Close செய்து விட வேண்டும். அதிக அளவு மொபைல் போனில் Games விளையாடுவதால் மொபைல் அதிக அளவு சூடாகி விடும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை gamesகளை Close செய்வது அவசியம்.

ஜிபிஎஸ், இணையம், ப்ளூடூத்:

அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் பதிவிறக்கம் செய்வது அல்லது இணையத்தில் உலாவுவது உங்கள் ஸ்மார்ட்போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு உங்களுக்கு தேவையானவற்றை பதிவிறக்கம் செய்யலாம். வைஃபை இருந்தால், அதையே பயன்படுத்துங்கள். மொபைல் டேட்டாவை விட, குறைவான திறனே, வைஃபை எடுத்துக்கொள்ளும்.

உங்க Smart Phone சூடாவதை தடுக்க:

How to stop Smartphone overheating in tamil – மொபைல் போனில் உள்ள software மற்றும் Appsகளை எப்பொழுதும் Update ஆக வைத்திருத்தல் அவசியம். பிளாஸ்டிக் வகை பேனல் கொண்ட மொபைல்களை நேராக சூரிய ஒளி படக் கூடிய இடங்களில் வைத்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல்கள் அதிக சூடாக இருக்கும் பொழுது mobile case coverகளை அகற்றி விடுவதால் மொபைல் சூடு குறையும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil