உங்க போனில் Internet ஆன் செய்வதற்கு முன் இந்த Settings -யை மாத்திடுங்க..!

keyboard safety settings in tamil

Change These Settings Before Turning On Internet

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மக்கள் அனைவருமே ஸ்மார்ட் போன் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். போனை நாம் பயன்படுத்திய காலம் மாறி போன் நம்மை பயன்படுத்தும் காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். நாம் போனை பயன்படுத்தும் விதத்தில் தான் அதன் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றது. அந்த வகையில் போனில் Internet ஆன் செய்வதற்கு முன் மாற்ற வேண்டிய Settings என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Change These Settings Before Turning On Internet in Tamil:

ஸ்டேப் -1 

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Language & Input என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -2

Manage Keyboard

பின் அதில் உள்ளே சென்றால் கீழே On-Screen Keyboard அல்லது Manage Keyboard என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!

ஸ்டேப் -3

Settings

பிறகு அதில் நீங்கள் எந்த Keyboard பயன்படுத்துகிறீர்களோ அந்த Keyboard அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து அதில் Settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -4

Advanced

அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Advanced அல்லது More என்ற ஆப்சன் இருக்கும்.

போனில் Internet Speedஅதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்

ஸ்டேப் -5

Share Usage Statistics

அதை கிளிக் செய்தால் உள்ளே Share Usage Statistics என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 இந்த Share Usage Statistics என்ற ஆப்சன் ON -ல் நீங்கள் Keyboard இல் டைப் செய்யும் விஷயம் அனைத்தையும் இந்த Keyboard நிறுவனம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த ஆப்ஷனை OFF செய்து வைத்து கொள்ளுங்கள்.  
நீங்கள் airtel பயன்படுத்துபவரா.! Internet speed ஆக இருக்க இந்த Settings பண்ணுங்க

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil