காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ..!

latest tech news in tamil

Latest Tech News in Tamil / இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ

Latest Tech News in Tamil:- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் சைபீரா எனும் ரோபோ (Robot Cybira) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை பற்றிய சில தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்வோமா..!

சைபீரா ரோபோ சிறப்பு அம்சங்கள்:-

Latest Tech News in Tamil:-

இந்த சைபீரா ரோபோ (Robot Cybira) குறிப்பாக காவல் நிலையத்தில் புகார்களைப் பெற்று காவல்துறையினருக்கு எளிதாக அந்த புகார்களைக் கொண்டு போய் சேர்க்கும் வகையில் இந்த ரோபோ மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகே இருக்கும் மஹாராணிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள இந்த ரோபோவில், 360 டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையில் 13 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன எனத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சைபிரா ரோபோவில் (Robot Cybira) உள்ள கேமராவில் ரவுடிகள் அல்லது காவல் துறையினர் தேடும் நபர்கள் சிக்கினால், அவர்களை உடனடியாக படம் பிடித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்துவிடும்.

இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?

 

மேலும் இந்த சைபிரா ரோபோ (Robot Cybira) மக்களிடையே தானாகவே புகார்களைப் பெறும் ஆற்றல் கொண்டது, புகார்களைப் பெறுவது மட்டுமின்றி, புகார்களுக்கான ஒப்புகை சீட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் அளித்துவிடும்.

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை உயரதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்தி அனுப்பும். மேலும் இந்த ரோபோவை ரோபோ கப்லர் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை மற்றும் அதன் அம்சங்கள்..!

 

அதேசமயம் இந்த ரோபோவை (Robot Cybira) மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் வைப்பதால் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என ஆந்திரா காவல் துறை கருதுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Latest Tech News in Tamil